2018 ஸ்விஃப்ட் காருக்கு இதுவரை கிடைத்துள்ள புக்கிங் எவ்ளோ தெரியுமா..?? மயக்கமே வந்திரும்..!!

Written By:

இந்தியளவில் புதிய ஸ்விஃப்ட் காருக்கான புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கிய நாளிலிருந்தே மாருதி சுஸுகி விற்பனையங்கள் திக்குமுக்காடி வருகின்றன.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

நாட்டிலுள்ள அனைத்து மாருதி சுஸுகி டீலர்களும் 2018 ஸ்விஃப்ட் காருக்கான புக்கிங்கில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

ரூ. 11,000 முதல் இந்த காருக்கான புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், 2018 ஸ்விஃப்ட் கார் நாளை விற்பனைக்கு அறிமுகமாகிறது.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நாளை கிரேட்டர் நொய்டா பகுதியில் தொடங்கவுள்ளது. அப்போது இந்த காருக்கான விற்பனை விலை மற்றும் இதர அம்சங்கள் குறித்த தகவல்களை மாருதி சுஸுகி வெளியிடும்.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

மாருதியின் புதிய தயாரிப்புகள் வெளிவரும் போது, எப்போதுமே அதற்கான தேவை என்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கும்.

ஆனால் புதிய ஸ்விப்ஃட் காருக்கான தேவை மாருதியின் மற்ற தயாரிப்புகளை விட அதிகளவில் உள்ளதாக டீலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Recommended Video - Watch Now!
Auto Rickshaw Explodes In Broad Daylight
2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

இதுவரை ப்ரீ-புக்கிங் முறையில் இந்தியளவில் 30,000 வாடிக்கையாளர்கள் 2018 ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவை செய்துள்ளனர்.

இந்த இமாலய புக்கிங் அறிவிப்பால், விற்பனைக்கு வருவதற்கு முன்னரே மூன்றாம் தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் மெஹா ஹிட் மாடல் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

ஆட்டோ எக்ஸ்போவில் நாளை நடைபெறும் ஸ்விஃப்ட் கார் அறிமுக விழாவில் 2018 ஸ்விஃப்ட் காருக்கான விலை ரூ. 5 லட்சத்திலிருந்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

மாருதி சுஸுகி 2018 ஸ்விஃப்ட் காருக்கான வரவேற்பு அதிகளவில் இருப்பதை பார்த்து அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மற்றும் செயல் அதிகாரி கென்னிச்சி அயூக்குவா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

தற்போதைய ஸ்விஃப்ட் காரில் உள்ள அதே செயல்திறன் தான் இந்த புதிய தலைமுறை காரிலும் உள்ளன. 1.2 லிட்டர் கே12 பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் டிடிஐஎஸ் ஆகிய எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் வெளிவருகிறது.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

இதன்மூலம் பெட்ரோல் எஞ்சின் கொண்ட 2018 ஸ்விஃப்ட் கார் 83 பிஎச்பி பவர் மற்றும் 140 என்.எம் டார்க் திறனை வழங்கும். அதேபோல டீசல் எஞ்சின் கொண்ட 2018 ஸ்விஃப்ட் கார் 74 பிஎச்பி பவர் மற்றும் 190 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் கார் விற்பனையில் முன்னணியில் உள்ள பலேனோ மாடலும் இதே எஞ்சின் செயல்திறனை தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

புதிய ஸ்விஃப்ட் காரின் வேரியன்டுகள் அனைத்திலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கார் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையிலும் வெளியிடப்படுகிறது.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

தொடர்ந்து இதே டிரான்ஸ்மிஷன் தேவைகளில் தான் பலேனோ கார் வெளிவருகிறது. ஆனால் சிவிடி உடன் கூடிய கியர்பாக்ஸ் பலேனோவின் பெட்ரோல் வேரியன்டுகளில் மட்டும் உள்ளன.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

புதிய ஸ்விஃப்ட் காரின் உள்கட்டமைப்பில் உள்ள 7 இஞ்ச் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 3 ஸ்போக் உடன் கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை உள்ளன.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

மேலும் பாதுகாப்பு தேவைகளுக்காக டூயல் ஏர்பேகுகள், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, பிரேக் அசிஸ்ட், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆகிய அம்சங்கள் புதிய ஸ்விஃப்ட் காரின் எல்லா வேரியன்டுகளிலும் உள்ளன.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

பலேனோ காரில் இடம்பெற்றுள்ள இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார்பிளே, ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி, நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2018 ஸ்விஃப்ட் காருக்கு குவியும் இமலாய புக்கிங்... டீலர்கள் திண்டாட்டம்..!!

அதேபோல ஆடியோ கட்டளைகளை கொண்ட 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், கேமரா உடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை, டூயல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் உடன் கூடிய ஏபிஎஸ் போன்ற அம்சங்களும் பலேனோ காரில் உள்ளன.

English summary
Read in Tamil: 2018 All New Maruti Swift Car Pre Bookings Create Mega Record. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark