லிட்டருக்கு 29.41 கிமீ மைலேஜ் ... அசத்தப்போகும் புதிய ஹோண்டா சிவிக் டீசல்!

ஐரோப்பிய சோதனைகளின்படி, புதிய ஹோண்டா சிவிக் டீசல் காரின் அதிகாரப்பூர்வ மைலேஜ் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

By Saravana Rajan

அண்மையில் நடந்து முடிந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹோண்டா சிவிக் கார் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதன்மூலமாக, இந்த புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் கார் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருப்பது உறுதியானது.

புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலின் மைலேஜ் விபரம்!

இந்த நிலையில், ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்ல இருக்கும் புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலின் மைலேஜ் விபரங்களை ஹோண்டா கார் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த தகவல் ஆட்டோமொபைல் துறையினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலின் மைலேஜ் விபரம்!

ஐரோப்பாவில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், புதிய ஹோண்டா சிவிக் கார் லிட்டருக்கு 29.41 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டி செக்மென்ட் செடான் கார் ரகத்தில் இது மிக உச்சபட்ச மைலேஜ் அளவாக இருப்பதே கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலின் மைலேஜ் விபரம்!

இந்தியாவிலும் இதே டீசல் மாடல் விற்பனைக்கு வர இருப்பது, இந்தியர்களின் ஆவலைத் தூண்டி இருக்கிறது. அதேநேரத்தில், ஐரோப்பாவில் சிவிக் டீசல் காரில் ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலின் மைலேஜ் விபரம்!

சிக்னல்களிலும் அல்லது குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் கார் நின்றுகொண்டிருந்தால் எஞ்சின் தானாக ஆஃப் ஆகி விடும். க்ளட்ச்சை இயக்கும்போது எஞ்சின் உயிர் பெற்றுவிடும். இதன்மூலமாக, 5 சதவீதம் வரை மைலேஜ் கூடுதலாக இருக்கும்.

புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலின் மைலேஜ் விபரம்!

ஆனால், இந்திய மாடலில் ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம் வசதி இடம்பெறுமா என்பது சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது. ஒருவேளை, ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை என்றாலும், புதிய சிவிக் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் வரை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலின் மைலேஜ் விபரம்!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின்தான் புதிய ஹோண்டா சிவிக் காரிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஹோண்டா சிஆர்வி 7 சீட்டர் காரில் இருக்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு டர்போசார்ஜர்கள் துணையுடன் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது.

புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலின் மைலேஜ் விபரம்!

ஆனால், புதிய சிவி காரில் அதே 1.6 லிட்டர் டீசல் எஞ்சின்தான் என்றாலும் ஒற்றை டர்போசார்ஜர் கொண்டதாக இருக்கும். இந்த புதிய டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலின் மைலேஜ் விபரம்!

புதிய ஹோண்டா சிவிக் டீசல் கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஐரோப்பிய மார்க்கெட்டில் புதிய சிவிக் டீசல் மாடலில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட இருக்கிறது. முதல்முறையாக 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட தனது காருக்கு ஹோண்டா இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை அளிக்க உள்ளது.

புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலின் மைலேஜ் விபரம்!

புதிய ஹோண்டா சிவிக் கார் டீசல் மாடல் தவிர்த்து, வழக்கம்போல் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும்,174 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் இருக்கும்.

புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலின் மைலேஜ் விபரம்!

புதிய ஹோண்டா சிவிக் கார் ரூ.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், ஹூண்டாய் எலான்ட்ரா மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா கார்களுடன் போட்டி போடும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரமான சாலை விபத்து ஒன்றில் அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜக-வின் சட்டமன்ற உறுப்பினர் லோகேந்திர சிங் பலியானார்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

உ.பி மாநிலத்தில் உள்ள பிஜ்னூர் மாவட்டம் நூர்பூர் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் லோகேந்திரா சிங். தனிப்பட்ட பணிக்காக அவருக்கு சொந்தமான டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் நெடுஞ்சாலை ஒன்றில் பயணம் மேற்கொண்டு இருந்தார்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

அப்போது அதே வழியில் வந்த டிரக்குடன் நேருக்கு நேர் மோதி, ஃபார்ச்சூனர் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதில் சம்பவ இடத்தில்யே எம்.எல்.ஏ லோகேந்திரா சிங் உயிரழந்தார்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

விபத்திற்கான காரணங்கள் பற்றி தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் சம்பவ இடத்தை பார்க்கும் போது விபத்து நடந்ததற்கான காரணங்கள் ஓரளவிற்கு புலப்படுகின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களும் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்றிருப்பது தெரிகிறது. ஆனால் விபத்தை யார் ஏற்படுத்தியிருப்பார்கள் என்பதில் தெளிவில்லை.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

இருந்தாலும் இதுக்குறித்து வெளியான புகைப்படங்களை ஆராயும் போது, நெடுஞ்சாலையில் லாரி வந்த பாதையில், தவறான வழியில் டொயோட்டா ஃபார்ச்சூனர் செலுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

இந்தியாவில் விற்பனையாகும் எஸ்யூவி ரக மாடல்களில் டொயோட்டா ஃபார்சூன்னர் அதிக வலிமையான, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்புகளை கொண்ட காராக உள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இந்த விபத்தில், இந்த கார் பெரியளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் காரின் முன்பகுதி அதிகளவில் சேதமாகி இருப்பதையும் பார்க்க முடிகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

டொயோட்டா ஃபார்சூனர் காரில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர் லோகந்திரா சிங்குடன், அவரது பாதுகாவலர் மற்றும் காரை ஓட்டி வந்தவரும் உயிரழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

கடந்த புதன்கிழமை, அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் மரணமடைந்த எம்.எல்.ஏ லோகந்திரா சிங்கிற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

சாலையில் ஏற்படும் விபத்துக்களை நம்மில் யாரும் தடுக்க முடியாது என்பது நிதர்சனம் தான். ஆனால் அந்த விபத்து எப்படி நிகழ்கிறது என்பதில் தான் புரிதல் உள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

போக்குவரத்து விதிகளை மதிக்காமல், பாதுகாப்பு உபகரணங்களை அணியாமல், அதிவேகத்தில் செல்வது போன்ற காரணிகளே பெரும்பாலான விபத்திற்கு காரணங்களாக உள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

உத்திர பிரதேசத்தில் நடந்த இந்த சாலை விபத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டு விபத்தில் உயிரிழந்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!

போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், அதை மீறுவோர் மீதான குற்ற நடவடிக்கைகளும் இந்தியாவில் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதை பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதை அரசு இனியாவது கவனத்தில் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
2018 Honda Civic Diesel mileage details Revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X