புதிய மினி கன்ட்ரிமேன் காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது: விபரம்!

Written By:

புதிய தலைமுறை மினி கன்ட்ரிமேன் காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. மினி கார் நிறுவனத்தின் டீலர்களில் இந்த புதிய மாடலுக்கு முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

2018 மினி கன்ட்ரிமேன் காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

புதிய மினி கன்ட்ரிமேன் காரில் சிறிய அளவிலான மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் புதிய எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் ஸ்கிட் பிளேட்டுகளும், இரட்டை குழல் புகைப்போக்கி அமைப்பும் முத்தாய்ப்பான விஷயங்கள்.

புதிய மினி கன்ட்ரிமேன் காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது: விபரம்!

புதிய மினி கன்ட்ரிமேன் காரில் 192 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. டீசல் மாடலில் 190 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 2.0 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.

புதிய மினி கன்ட்ரிமேன் காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது: விபரம்!

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இந்த புதிய மினி கன்ட்ரிமேன் காரிலும் பொருத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மினி கன்ட்ரிமேன் காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது: விபரம்!

புதிய மினி கன்ட்ரிமேன் காரில் 8.8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. வழக்கம்போல் ஸ்டீயரிங் வீல், சென்டர் கன்சோல் பகுதிகளில் ஏராளமான டயல்களுடன் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய மினி கன்ட்ரிமேன் காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது: விபரம்!

புதிய மினி கன்ட்ரிமேன் காரின் உற்பத்தி சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. எனவே, விரைவிலேயே இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மினி கன்ட்ரிமேன் காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது: விபரம்!

ரூ.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மினி கன்ட்ரிமேன் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இந்த புதிய மினி கன்ட்ரிமேன் கார் களமிறங்க உள்ளது.

மேலும்... #மினி #mini
English summary
Industry sources confirm that Mini dealerships have started accepting bookings for the 2018 Mini Countryman model.
Story first published: Wednesday, April 11, 2018, 19:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark