புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

Written By:
Recommended Video - Watch Now!
Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்! புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த மாதமே புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவிக்கான விலை விபரத்தை லேண்ட்ரோவர் நிறுவனம் வெளியிட்டது. இந்த நிலையில், புதிய ரேஞ்ரோவர் வெலர் எஸ்யூவியை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது லேண்ட்ரோவர் நிறுவனம். மொத்தம் 25 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

 புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்! புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்கள் ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களில் மிகச் சிறப்பானதாக இருக்கும். இந்த நிலையில், சாதாரண சாலைகளுக்கு ஏற்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாக இந்த புதிய எஸ்யூவியை களமிறக்கி இருக்கிறது லேண்ட்ரோவர்.

 புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்! புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரேஞ்ச்ரோவர் வரிசையில் மிகவும் வசீகரமான மாடலாகவும் இருக்கிறது. கம்பீரமான முகப்பு க்ரில், எல்இடி ஹெட்லைட்டுகள் அசத்தலான அம்சங்கள்.

 புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்! புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்தில் இரட்டை திரைகளுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கட்டுப்பாட்டு வசதிகள், உயர்தர இருக்கைகள், ரோட்டரி டயலுடன் கூடிய ஏசி கட்டுப்பாட்டு வசதி என அதிக சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர்களை வளைக்க காத்திருக்கிறது.

 புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்! புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 3 விதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இந்த எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இரண்டு தேர்வுகளில் கிடைக்கும். ஒரு மாடல் 247 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்திலும், மற்றொரு மாடல் 296 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்! புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இரண்டு டீசல் எஞ்சின்கள் 3 விதமான தேர்வுகளில் கிடைக்கும். இதில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வழங்கும் ஒரு மாடலிலும், மற்றொரு மாடல் 237 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனை வழங்கும் மாடலிலும் கிடைக்கும்.

 புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்! புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

விலை உயர்ந்த மாடலில் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 375 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். அனைத்து எஞ்சின்களும் இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

 புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்! புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி ரூ.73.83 லட்சம் முதல் ரூ.1.37 கோடி வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். பிஎம்டபிள்யூ எக்ஸ்5, ஆடி க்யூ7, வால்வோ எக்ஸ்சி90 மற்றும் ஜாகுவார் எஃப் பேஸ் உள்ளிட்ட சொகுசு வகை எஸ்யூவி கார்களுடன் போட்டி போடும்.

English summary
2018 Range Rover Velar launched India: Complete Details.
Story first published: Saturday, January 20, 2018, 14:05 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark