டொயோட்டா சி எச்ஆர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

டொயோட்டா சிஎச்ஆர் காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. கூபே மற்றும் எஸ்யூவி

By Saravana Rajan

டொயோட்டா சிஎச்ஆர் காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

டொயோட்டா சி எச்ஆர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பும், வர்த்தகமும் கார் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதனால், பல புதிய எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் மாடல்களை இந்தியாவில் களமிறக்க முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், பிரிமியம் எம்பிவி, எஸ்யூவி கார் மார்க்கெட்டில் வலுவான வர்த்தகத்தை வைத்திருக்கும் டொயோட்டா கார் நிறுவனம் புதிய எஸ்யூவி மாடலை களமிறக்க திட்டம் போட்டுள்ளது.

டொயோட்டா சி எச்ஆர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

இதற்காக, தனது சிஎச்ஆர் என்ற புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருக்கிறது. டொயோட்டா ஆலை அமைந்துள்ள பெங்களூரில் இந்த புதிய கார் தற்போது சோதனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதற்கான ஆதாரமாக ஸ்பை படங்களும் வெளியாகி இருக்கின்றன.

டொயோட்டா சி எச்ஆர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

கூபே மற்றும் எஸ்யூவி ரக கார்களின் டிசைன் அம்சங்களை கலந்து கட்டிய க்ராஸ்ஓவர் மாடலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. மிகவும் நவீன டிசைன் தாத்பரியங்களை பெற்றிருப்பதால் வாடிக்கையாளர்களை கவரும். வலிமையான வீல் ஆர்ச்சுகள், வித்தியாசமான பின்புற டிசைன் போன்றை இதற்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.

டொயோட்டா சி எச்ஆர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

வெளிநாடுகளில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 144 பிஎச்பி பவரையும், 188 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஹைப்ரிட் மாடலில் வரும் என்று தெரிகிறது.

டொயோட்டா சி எச்ஆர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் மாடல் டொயோட்டா சிஎச்ஆர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல். இந்த எஸ்யூவியில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 122 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். மேலும், எரிபொருள் சிக்கனத்திலும் போட்டியாளர்களை விஞ்சும்.

டொயோட்டா சி எச்ஆர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

புதிய டொயோட்டா கரொல்லா கார் உருவாக்கப்பட்ட டிஎன்ஜிஏ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இரண்டாவது கார் மாடல் இது. எனவே, கட்டுமானத்திலும், பாதுகாப்பு தரத்திலும் மிகச் சிறப்பாக இருக்கும் என்று கருத முடியும்.

டொயோட்டா சி எச்ஆர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!!

வரும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த கார் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2018 Toyota C-HR Compact SUV Spied In India.
Story first published: Wednesday, July 4, 2018, 18:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X