டொயாட்டோவின் புதிய யாரிஸ் செடான் ரக கார் மே மாதம் விற்பனைக்கு வருகிறது

Written By:

டொயாட்டோவில் புதிய யாரிஸ் ரக கார் வரும் மே 18ம் தேதி அறிமுகமாகிறது. இதன் விலை எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ8.4 லட்சத்தில் இருந்து 13.5 லட்சம் வரையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயாட்டோவின் புதிய யாரிஸ் செடான் ரக கார் மே மாதம் விற்பனைக்கு வருகிறது

டொயாட்டோ நிறுவனம் அதன் புதிய நடுத்தர செடான் ரக காரான யாரிஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. மே மாதம் 18ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த காருக்கான முன் பதிவு அதிகாரபூர்வமாக ஏப்., 22ம் தேதி துவங்குகிறது. டில்லியில் சில டீலர்கள் தற்போது ரூ 50,000 முன்பணத்துடன் முன்பதிவை துவங்கியுள்ளனர்.

டொயாட்டோவின் புதிய யாரிஸ் செடான் ரக கார் மே மாதம் விற்பனைக்கு வருகிறது

யாரிஸ் காரின் 108 எச்.பி., சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இந்த காரில் தற்போது டீசல் வேரியன்ட் இல்லை, எனினும் காருக்கு மக்களிடம் இருக்கும் வரவேற்ப்பை பொறுத்து பின்னர் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இந்த கார் மேனுவல் கியர் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோ கியர் ஆகிய இரண்டு ஆப்ஷன்களில் வர இருக்கிறது.

டொயாட்டோவின் புதிய யாரிஸ் செடான் ரக கார் மே மாதம் விற்பனைக்கு வருகிறது

போட்டியாளர்களை சமாளிக்க யாரிஸ் கார் பல அம்சங்களை கொண்ட வேரியன்ட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர் ரக வெரியன்டில் பவர் டிரைவர் சீட், பார்க்கிங் சென்சார், சைகையில் செயல்படும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

டொயாட்டோவின் புதிய யாரிஸ் செடான் ரக கார் மே மாதம் விற்பனைக்கு வருகிறது

இரவு நேரங்களில் பயன்படும் ஏர்கான் லைட்டிங், ஆல் வீல் டிஸ்க் பிரேக், டிரைவர் கால் பகுதி உட்பட 7 இடங்களில் ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஏபிஎஸ், இபிடி, இஎஸ்பி ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது.

டொயாட்டோவின் புதிய யாரிஸ் செடான் ரக கார் மே மாதம் விற்பனைக்கு வருகிறது

இந்த கார் கா்நாடகா மாநிலத்தில் உள்ள டொயாட்டோ நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. யாரிஸ் கார்கள் எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 8.4 லட்சத்தில் இருந்து 13.5 லட்சம் வரையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையை ஒப்பிடும் போது இது ஹோண்டா சிட்டி காருக்கு மிகப்பெரும் போட்டியாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

source : ஆட்டோ கார்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.புதிய மாருதி ஈக்கோ மற்றும் ஓம்னி மாடல்கள் பற்றிய விபரஙகள்!

02.விராட் கோலியின் புதிய காரின் விலை ரூ 3.8 கோடி

03."மசாஜ் செய்யும் யானை" ராயல் என்பீல்டை தொடர்ந்து கிண்டல் செய்யும் பஜாஜ்

04.ஏலத்திற்கு வருகிறது ஜேம்ஸ்பாண்ட் கார் ; ரூ 4 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு

05.சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்?

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2018 Toyota Yaris to launch on May 18. Read in tamil
Story first published: Friday, March 30, 2018, 10:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark