மஹிந்திரா மராஸ்ஸோ அறிமுக தேதி விபரம் வெளியானது!!

மாருதி எர்டிகா பட்ஜெட்டையும்,டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் இடவசதியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து புதிய எம்பிவி காரை மஹிந்திரா உருவாக்கி இருக்கிறது. அண்மையில் இந்த எம்பிவி ரக கா

By Saravana Rajan

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனைக்கு அறிமுகமாகும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா மராஸ்ஸோ அறிமுக தேதி விபரம் வெளியானது!!

இந்த நிலையில், புதிய மராஸ்ஸோ எம்பிவி காரை வரும் செப்டம்பர் 3ந் தேதி மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. சென்னையில் உள்ள மஹிந்திரா தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமும், அமெரிக்காவில் உள்ள மஹிந்திரா தொழில்நுட்ப மையமும் இணைந்து இந்த புதிய காரை உருவாக்கி இருக்கின்றன.

மஹிந்திரா மராஸ்ஸோ அறிமுக தேதி விபரம் வெளியானது!!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் அதிகாரப்பூர்வ இன்டீரியர் படங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில், இந்த கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் வர இருப்பது தெரிய வந்துள்ளது. இருக்கைகளை மடக்கும் வசதியும் இருப்பதால், தேவையானபோது அதிக பொருட்களையும், உடைமைகளையும் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்.

மஹிந்திரா மராஸ்ஸோ அறிமுக தேதி விபரம் வெளியானது!!

இந்த காரில் கருப்பு - பீஜ் வண்ணத்திலான இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு கருப்பு வண்ணத்திலும், இருக்கைகள் பீஜ் வண்ணத்திலும் இருக்கின்றன. 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ரூஃப் ஏசி சிஸ்டம் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

மஹிந்திரா மராஸ்ஸோ அறிமுக தேதி விபரம் வெளியானது!!

இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் உள்ளிட்டவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும். அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும்.

மஹிந்திரா மராஸ்ஸோ அறிமுக தேதி விபரம் வெளியானது!!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் வருகிறது. பின்னர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ அறிமுக தேதி விபரம் வெளியானது!!

மாருதி எர்டிகா பட்ஜெட்டில் சற்றே கூடுதல் இடவசதியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை இந்த கார் கவர்ந்து இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வாடிக்கையாளர்களில் சிலரையும் தன்பால் ஈர்க்கும் என்று நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
All New Mahindra Marazzo MPV launch on September 3.
Story first published: Saturday, August 18, 2018, 10:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X