ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை..

அறிமுகம் ஆன முதல் முயற்சியிலேயே, ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

By Arun

அறிமுகம் ஆன முதல் முயற்சியிலேயே, ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கடினமான இந்த போட்டியில், இந்தியா வெற்றி பெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை...!!!

எப்ஐஏ எனப்படும் பெடரேஷன் இன்டர்நேஷனல் தி ஆட்டோமொபைல் அமைப்பால், ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் (இஆர்சி) போட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய கண்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1953ம் ஆண்டு முதல் இந்த போட்டி நடைபெற்று கொண்டுள்ளது.

ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை...!!!

இதனிடையே 2018 எப்ஐஏ ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது சுற்று, கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்றது. இதில், இந்தியர்களான அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் முதல் முறையாக கலந்து கொண்டனர்.

ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை...!!!

முதல் முறை என்றாலும் அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாகை சூடினர். இதன்மூலம் பாரம்பரியம் மிக்க ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற முதல் இந்திய கூட்டணி என்ற சாதனையை அவர்கள் படைத்தனர்.

ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை...!!!

அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் ஃபோர்டு பியஸ்டா ஆர்2 காரை ஓட்டினர். பால்டிக் மோட்டார் ஸ்போர்ட் ப்ரமோஷன் என்ற மோட்டார் ஸ்போர்ட் கம்பெனி அந்த காரை தயார் செய்திருந்தது. இந்த கம்பெனி லாத்வியாவை அடிப்படையாக கொண்டது.

ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை...!!!

அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் அடங்கிய இந்திய கூட்டணிக்கான ஸ்பான்ஸரை, ராமகிருஷ்ணா ரேஸ் பெர்மார்மென்ஸ் மேனேஜ்மெண்ட் (ஆர்ஆர்பிஎம்) மற்றும் பானா எஜூகேனஷனல் குருப் ஆகியவை செய்திருந்தன.

ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை...!!!

இந்திய தேசிய ரேலி சாம்பியனான (ஐஎன்ஆர்சி) அமித்ரஜித் கோஸ்தான், ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது சுற்றில், டிரைவராக செயல்பட்டார். 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஐஎன்ஆர்சி பட்டத்தை அமித்ரஜித் கோஸ் வென்றுள்ளார். அமித்ரஜித் கோஸ் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர்.

ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை...!!!

அமித்ரஜித் கோசுக்கு கோ-டிரைவராக செயல்பட்ட அஸ்வின் நாயக், கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர். இந்திய மண்ணில் நடைபெற்ற கிட்டத்தட்ட அனைத்து ரேலிகளிலும் அஸ்வின் நாயக் வெற்றி பெற்றுள்ளார்.

ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை...!!!

ஹிமாலயன் ரேலி மற்றும் டெசர்ட் ஸ்ட்ரோம் ரேலிக்களில் தலா 5 முறை அவர் வெற்றி வாகை சூடியுள்ளார். அதுமட்டுமின்றி சப்-ஹிமாலயன் ரேலியில் 4 முறை அவர் வெற்றி பெற்றுள்ளார். அமித்ரஜித் கோசுக்கு மிக நீண்ட நாட்களாக அவர் கோ-டிரைவராக இருந்து வருகிறார்.

ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை...!!!

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டீஸ் ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில், அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் அடங்கிய இந்திய கூட்டணி அசத்தலாக செயல்பட்டிருந்தது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, அவர்களால் அப்போது அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை...!!!

தற்போது படைத்துள்ள சாதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமித்ரஜித் கோஸ், ''பழைய தலைமுறை ஃபோர்டு பியஸ்டா ஆர்2 காருடன்தான் போட்டிக்கு வந்திருந்தோம். எனினும் போட்டியை நிறைவு செய்து விட வேண்டும் என்பதைதான் முதல் இலக்காக வைத்திருந்தோம். போட்டியை நிறைவு செய்து விட்டால், நிச்சயமாக பதக்க மேடை ஏறி விட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது'' என்றார்.

ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை...!!!

மிக வேகமாக செல்வதை காட்டிலும் பாதுகாப்பாக பயணிப்பதில்தான் இந்திய கூட்டணி அதிக கவனம் செலுத்தியது. அமித்ரஜித் கோஸ் கூறியது போல் அதுதான் இந்திய கூட்டணிக்கு வெற்றி தேடி தந்தது. கரடுமுரடான பாதையில் அதிவேகமாக பயணித்ததால், எதிரணி வீரர்கள் ஒரு சிலரின் கார்கள் சேதமடைந்தன. இதனால் போட்டியை நிறைவு செய்ய முடியாமல், அவர்கள் பாதியிலேயே விலக நேரிட்டது.

ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை...!!!

இதுகுறித்து பானா எஜூகேனஷனல் குருப் சேர்மன் டாக்டர் பிரசாத் ஹெக்டே கூறுகையில், ''அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் இந்தியாவிற்கு பெருமையை கொண்டு வந்துள்ளனர். ஸ்பான்ஸர்ஷிப் மூலமாக அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது மகிழ்ச்சி'' என்றார்.

Most Read Articles
English summary
Amittrajit Ghosh And Ashwin Naik Become First Indian's To Win European Rally Championship In Debut Rally. read in tamil.
Story first published: Monday, June 4, 2018, 17:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X