விரைவில் "மஹிந்திர பாகுபலி" என்ற பெயரில் புதிய கார் வருகிறதா?

மஹிந்திரா நிறுவன சிஇஓ தங்கள் நிறுவனத்தின் அடுத்த காருக்கான பெயர் குறித்த பரிந்துரையை கேட்டார் அதில் மஹிந்திர பாகுபலி என்ற பெயரும் பரிந்துரையாக வந்துள்ளது. இதனால் மஹிந்திரா நிறுவனம் மூலம் பாகுபலி கார்

By Balasubramanian

மஹிந்திரா நிறுவன சிஇஓ தங்கள் நிறுவனத்தின் அடுத்த காருக்கான பெயர் குறித்த பரிந்துரையை கேட்டார் அதில் மஹிந்திர பாகுபலி என்ற பெயரும் பரிந்துரையாக வந்துள்ளது. இதனால் மஹிந்திரா நிறுவனம் மூலம் பாகுபலி கார் விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில்

மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் மிக ஆக்டிவ்வாக இருப்பவர். இவர் போடும் டுவிட்டுகள் சில நேரங்களில் ஆட்டோமொபைல் துறையில் தலைப்பு செய்தியாக கூட வரும்.

விரைவில்

இவ்வாறு டுவிட்டரில் செயல்பாட்டு வரும் ஆனந்த் மஹிந்திராவிற்கு மஹிந்திரா நிறுவன காரின் ரசிகர் ஒருவர் தான் விரைவில் கார் வாங்க போவதாகவும் நீங்கள் ஏதேனும் இந்திய மொழிகளில் உள்ள பெயர்களில் உங்கள் காருக்கு என்ன பெயர் வைக்க போகிறீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு ஆனந்த் மஹிந்திரா அளித்த பதிலில் நீங்கள் எதாவது பெயரை பரிந்துரை செய்யுங்கள் காருக்களுக்கான பெயரை பட்டியலிடுவது எனக்கு பிடித்திருக்கிறது என கூறினார்.

விரைவில்

அவர் பெயர் பரிந்துரைக்க கூறியது. தான் தாமதம் எல்லோரும் புது புது விதமான பெயர்களை பரிந்துரை செய்ய துவங்கி விட்டனர். அதில் ஆச்சரியம் என்ன என்றால் அழிந்து வரும் மொழிகளாக கருதப்படும். ஹர்யானாவி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் உள்ள வார்த்தைகளை கூட சிலர் பரிந்துரை செய்தனர்.

விரைவில்

சிலர் பாலஹக் (வெள்ளை), மேகபுஸ்பா(மேக பூக்கள்), சாய்பியா (பச்சைக்கிளி), சுக்ரீவா (தங்கம்), கப்பி, உதான் காத்தோலா, புஷ்பக் உள்ளிட்ட பல பெயர்களை பலர் தொடர்ந்து பரிந்துரை செய்துவந்தனர்.

இதற்கு எல்லாம் மேலாக ஒருவர் "மஹிந்திர பாகுபலி" என பெயர் வையுங்கள் என குறிப்பிட்டிருந்தார். அவரது அந்த பதில் டுவிட்டிற்கு அதிகமான மக்கள் லைக் மற்றும் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

விரைவில்

மேலும் அவர் இந்த காருக்கான மியூசிக் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகிவிட்டது நீங்கள் காரை வெளியிட வேண்டியது தான் பாக்கி என குறிப்பிட்டிருந்தார்.

விரைவில்

சிலர் சீட்டா, ஹம்சஃபர், டீர், தாக்கட், உள்ளிட்ட பெயர்களை பரிந்துரை செய்துனர். இதில் நா ம் கவனிக்க வேண்டியது என்ன என்றால் மஹிந்திரா நிறுவனம் தனது வானகங்களுக்கு பெரும்பாலும் ஓ என்ற ஆங்கில சொல்லில் முடியும் பெயர்களையே வைத்துள்ளது.

விரைவில்

முக்கியமாக மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, சைலோ, வேரிட்டோ, என்ற பெயரை வைத்துள்ளது. இதை கவனித்துவந்த மஹிந்திரா ரசிகர் ஒருவர் தனது பரிந்துரையாக மஹிந்திரா சாஸ்த்ரியோ என்ற பெயரை பரிந்துரை செய்தார். அதாவது சமஸ்கிருத சொல்லான சாஸ்திரா என்ற சொல்லை திரித்து சாஸ்த்ரியோ என சொல்லியுள்ளார்.

இதை எல்லாம் கண்ட ஆனந்த மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பெயர்களை பரிந்துரை செய்த அனைவருக்கும் நன்றி உங்களது பெயர்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என பெயர் சேர்க்கும் லைபிரி சற்று பெரியதாகியுள்ளது.

விரைவில்

ஆனால் தற்போது என் கவலை எல்லாம் எனது டுவிட்டர் பக்கத்தை எங்கள் நிறுவனத்தின் போட்டியார்களும் பார்க்ககூடும் என்பது தான் என குறிப்பிட்டிருந்தார்.

விரைவில்

பரவலாக இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் மஹிந்திர பாகுபலி என்ற பெயர் தான் தங்களது நிறுவனத்தின் பொருத்தமாகவும், மிகவும் பிரபலமாகவும் இருக்கிறது ஆனால் ஆனந்த் மஹிந்திரா எந்த பெயரை பரிந்துரை செய்கிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Anand Mahindra's next car could have a bhahubali name
Story first published: Friday, June 29, 2018, 19:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X