மும்பையில் அஸ்டன் ரேபிட் கார் விபத்தில் சிக்கி பலத்த சேதம்!!

Written By:

மும்பையில், விலை உயர்ந்த அஸ்டன் மார்ட்டின் கார் விபத்தில் சிக்கியதில் முன்புறம் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்து படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

மும்பையில் அஸ்டன் ரேபிட் கார் விபத்து: முகப்பு

சாலை சந்திப்பு ஒன்றை கடக்க முயன்றபோது இந்த கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், விபத்து நடந்த இடம் குறித்த தகவல் இல்லை.

மும்பையில் அஸ்டன் ரேபிட் கார் விபத்து: முகப்பு

காரின் இடது முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. காரின் 20 அங்குல அலாய் வீல்கள் நொறுங்கி போய்விட்டன. அதுதவிர, இடதுபுற பானட், முன்புற க்ரில் அமைப்பு மற்றும் சஸ்பென்ஷனும் சேதமடைந்தது.

மும்பையில் அஸ்டன் ரேபிட் கார் விபத்து: முகப்பு

காரில் ஏர்பேக்குகள் சரியான நேரத்தில் விரிந்துள்ளதால், பயணித்தவர்கள் பெரிய அளவிலான காயங்கள் இல்லாமல் உயிர் தப்பி இருப்பது உறுதியாகி இருக்கிறது.

மும்பையில் அஸ்டன் ரேபிட் கார் விபத்து: முகப்பு

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் செடான் ரகத்தை இந்த கார் உலக அளவில் கோடீஸ்வரர்களால் பெரிதும் விரும்பப்படும் மாடல். அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் 4 இருக்கைகள் கொண்ட செடான் ரக மாடல் என்பதே இதற்கு காரணம்.

மும்பையில் அஸ்டன் ரேபிட் கார் விபத்து: முகப்பு

இந்த காரில் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 470 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்றிருக்கிறது.

மும்பையில் அஸ்டன் ரேபிட் கார் விபத்து: முகப்பு

இந்த சக்திவாய்ந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டும் வல்லமை கொண்டது. மணிக்கு 303 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது. இதுபோன்ற சக்திவாய்ந்த கார்களை நகரங்களில் ஓட்டும்போது மிக மிக கவனமாக இருப்பது அவசியமாகிறது.

மும்பையில் அஸ்டன் ரேபிட் கார் விபத்து: முகப்பு

இந்த கார் இப்போது உற்பத்தியில் இல்லை. இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ.3.99 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்தது. ஆன்ரோடு ரூ.4.5 கோடி இருந்தது.

மும்பையில் அஸ்டன் ரேபிட் கார் விபத்து: முகப்பு

இந்தியாவில் வெகு சில அஸ்டன் மார்ட்டின் கார்களில் ஒன்றான இந்த ரேபிட் கார் விபத்தில் சிக்கி இருப்பது சூப்பர் கார் பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

English summary
An Aston Martin Rapide crashed in Mumbai, Maharashtra. The crash has left the Aston Martin with a heavily damaged front quarter.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark