ஆட்டோ எக்ஸ்போ 2018 செய்திகள் உடனுக்குடன்... டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்!

Written By:

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நாளை மறுதினம் துவங்க இருக்கும் 14- வது சர்வதேச ஆட்டோமொபைல் திருவிழா நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்க இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போ 2018 கவரேஜ்: நாங்க ரெடி... நீங்க ரெடியா?

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ என்று குறிப்பிடப்படும் நம் நாட்டின் மாபெரும் சர்வதேச வாகன திருவிழா வரும் 7ந் தேதி முதல் 14ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கான கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் வளாகத்திலும், வாகன உதிரிபாகங்களுக்கான கண்காட்சி டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்திலும் நடக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போ 2018 கவரேஜ்: நாங்க ரெடி... நீங்க ரெடியா?

வரும் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்களும் பத்திரிக்கையாளர்களுக்கான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும் 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை பொது பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த முறை ஆட்டோ எக்ஸ்போவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 37 வாகன தயாரிப்பு நிறுவனங்களும், கல்வி மற்றும் ஆட்டோமொபைல் சார்ந்த நிறுவனங்களும் பங்கேற்க இருக்கின்றன.

Recommended Video - Watch Now!
Auto Rickshaw Explodes In Broad Daylight
ஆட்டோ எக்ஸ்போ 2018 கவரேஜ்: நாங்க ரெடி... நீங்க ரெடியா?

ஆட்டோ எக்ஸ்போவில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய கார், பைக் மாடல்கள் அறிமுகமாக இருக்கின்றன. குறிப்பாக, இந்த முறை ஏராளமான மின்சார மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போ 2018 கவரேஜ்: நாங்க ரெடி... நீங்க ரெடியா?

இதற்காக எமது டிரைவ்ஸ்பார்க் தளத்தின் எடிட்டர் ஜோபோ குருவில்லா உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் நொய்டாவில் முகாமிட உள்ளனர். எமது குழுவினர் தரும் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை டிரைவ்ஸ்பார்க் தளத்திலும், சமூக வலைதள பக்கங்களிலும் வாசகர்கள் உடனுக்குடன் பெற முடியும்.

ஆட்டோ எக்ஸ்போ 2018 கவரேஜ்: நாங்க ரெடி... நீங்க ரெடியா?

எமது ஒன்இந்தியா தமிழ் செய்தி தளத்திலும் ஆட்டோ எக்ஸ்போ செய்திகளுக்கான பிரத்யேக செய்தி இணைப்பு வழங்கப்பட இருக்கிறது. அங்கிருந்தும் வாசகர்கள் ஆட்டோ எக்ஸ்போ செய்திகளை பெற முடியும்.

ஆட்டோ எக்ஸ்போ 2018 கவரேஜ்: நாங்க ரெடி... நீங்க ரெடியா?

வாசர்களின் தரும் ஆதரவுடன், வழக்கமான உற்சாகத்துடன் 2018 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வுகளை உடனுக்குடன் செய்தி வடிவத்தில் வழங்க இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

2018 ஆட்டோ எக்ஸ்போ செய்திகள்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டிவிட்டர் பக்கம்

English summary
The 12th Auto Expo 2018, kickstarts on 5th February and DriveSpark will cover the entire automotive extravaganza.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark