மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் 'கரிகாலன்'.. ஒத்தை ஆளா நின்னு விளையாட ரெடி

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாக் பேக் எடிசன் வெகு விரைவில் இந்தியாவில் லான்ச் ஆகவுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், அதிக பிரீமியம் லுக் உடன் இந்த கார் வெளிவருகிறது.

By Arun

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் 'பிளாக் பேக் எடிசன்' வெகு விரைவில் இந்தியாவில் லான்ச் ஆகவுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், அதிக பிரீமியம் லுக் உடன் வெளிவரவுள்ள இந்த கார் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் எஸ்யூவி வகை கார்களில் ஒன்று ஜீப் காம்பஸ். ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாக் பேக் (Black Pack) எடிசன் வெகு விரைவில் இந்தியாவில் லான்ச் ஆக உள்ளது.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

வழக்கமான காம்பஸ் எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்டுதான், பிளாக் பேக் எடிசன் உருவாக்கப்படுகிறது. அதாவது காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாக் பேக் எடிசனில், விஸ்வல் அப்டேட்கள் (Visual Updates) மட்டுமே செய்யப்படும்.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

மெக்கானிக்கல் (Mechanical) அம்சங்கள் அனைத்தும் வழக்கமான காம்பஸ் எஸ்யூவி காரை போன்றே இருக்கும். வழக்கமான காம்பஸ் எஸ்யூவி காருடன் ஒப்பிடுகையில், பிளாக் பேக் எடிசனின் விலை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

பிளாக் பேக் எடிசனின் விங் மிரர்கள் (Wing Mirrors), அலாய் வீல்கள் (Alloy Wheels) மற்றும் ஃரூப் (Roof) ஆகியவை கருப்பு நிறத்தில் வழங்கப்படலாம். கருப்பு நிற லெதர் இருக்கைகள் என இதன் இன்டீரியர்களும் கருப்பு நிறத்திலேயே காட்சியளிக்கும்.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

ஆக மொத்தம் முழுக்க முழுக்க கருப்பு நிறம் கொண்ட ஒரு காரை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் பிளாக் பேக் எடிசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் தற்போது வரை ஜீப் இந்தியா நிறுவனம் வெளியிடவில்லை.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், பிளாக் பேக் எடிசன் வெளிவருவது உறுதி என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், பிளாக் பேக் எடிசன் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் லிமிடெட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்படுமா? அல்லது வழக்கமான வேரியண்ட்களுடன் ஒன்றாக நிலை நிறுத்தப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

இந்தியாவில் வெகு விரைவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. எனவே பண்டிகை காலத்திற்கு முன்னதாக காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாக் பேக் எடிசனை ஜீப் நிறுவனம் லான்ச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற எஸ்யூவி கார்களில் ஒன்றாக ஜீப் காம்பஸ் இன்றளவும் திகழ்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் கடந்த சில மாதங்களாக, ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் விற்பனை திடீரென சற்றே சரிந்து வருகிறது.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

எனவே புதிய பிளாக் பேக் எடிசனை லான்ச் செய்வதன் மூலமாக காம்பஸ் எஸ்யூவி காரின் விற்பனையை அதிகரிக்க முடியும் என ஜீப் நிறுவனம் கருதுகிறது. அதுவும் பண்டிகை காலத்திற்கு முன்னதாக லான்ச் செய்யப்படுவதால் நிச்சயம் பிளாக் பேக் எடிசனின் விற்பனை சூடுபிடிக்கும்.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

விற்பனையை அதிகரிக்க, கார் உற்பத்தி நிறுவனங்கள் கையாளும் வழக்கமான முறைகளில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது. காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாக் பேக் எடிசனுடன் சேர்த்து, லிமிடெட் ப்ளஸ் (Limited Plus) என்ற புதிய டாப் வேரியண்ட்டும் லான்ச் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

இந்த புதிய லிமிடெட் ப்ளஸ் வேரியண்ட்டில், சன் ஃரூப், பெரிய 8.4 இன்ச் டச்ஸ்கீரின் இன்போடெயின்மென்ட் யூனிட், டிரைவர் இருக்கையை எலக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி என பல்வேறு கூடுதல் வசதிகள் இடம்பெறவுள்ளன.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

தற்போதைய நிலையில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார், 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும், 11 வித்தியாசமான வேரியண்ட்களுடனும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

அதே நேரத்தில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக, 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரானது தற்போது 15.35 லட்ச ரூபாய் முதல் 21.95 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

இதுதவிர காம்பஸ் எஸ்யூவி காரின் டிரெய்ல்ஹவாக் (Trailhawk) வெர்ஷனை 2019ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு உள்ளாக ஜீப் நிறுவனம் இந்தியாவில் லான்ச் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் புதிய வேரியண்ட்..

டிரெய்ல்ஹவாக் வெர்ஷனானது, ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் ஆப் ரோடு வேரியண்ட் ஆகும். ஆப் ரோடு பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜீப் காம்பஸ் டிரெய்ஹவாக், 2.0 லிட்டர் டீசல் இன்ஜினில் இருந்து சக்தியை பெறுகிறது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Black Pack Edition of Jeep Compass SUV Will Launch Soon In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X