TRENDING ON ONEINDIA
-
காஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா
-
திடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...
-
கார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
-
தலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை
-
வேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன?
-
ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா? “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா
-
ஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு
-
ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!
புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
புதிய பிஎம்டபிள்யூ ஷேடோ எடிசன் 320டீ வேரியண்ட்டிலும், 330ஐ எம் ஸ்போர்ட் மாடலிலும் கிடைக்கிறது. வசீகரத்தை கூட்டும் அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஷேடோ எடிசன் மாடல் வந்திருக்கிறது. மேலும், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஹெட்லைட்டில் புகை சூழ்ந்தது போன்ற கரும் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புற கிட்னி க்ரில் அமைப்பில் பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. இந்த காரில் விசேஷமான டிசைன் கொண்ட 18 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
புதிய ஷேடோ எடிசன் காரில் இரட்டை வண்ண அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 8.7 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெர்று இருக்கிறது. 10.5 அங்குல திரையுடன் கூடிய இன்ஸட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.
ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார் மற்றும் 250வாட் ஆடியோ சிஸ்டம், 330ஐ மாடலில் வேரியபிள் ஸ்போர்ட் ஸ்டியரிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இதுதவிர, சாதாரண மாடலில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் இந்த காரில் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது.
எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 330ஐ எம் ஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர்் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 248 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
320டீ ஸ்போர்ட் டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த மாடலில் 8 ஸ்பீடு ஆட்டோமேமட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ 330ஐ மாடல் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 5.8 வினாடிகளில் எட்டிவிடும். 320டீ மாடலானது 7.2 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஷேடோ எடிசன் காரின் பெட்ரோல் மாடல் ரூ.47.30 லட்சம் விலையிலும், 320டீ டீசல் மாடல் ரூ.41.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.