பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி காரை ரூ. 58.9 லட்சம் விலையில் அறிமுகம் செய்த சச்சின் டெண்டுல்கர்

Written By:

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் புதிய 6 சிரீஸ் கிரான் டுரீஸ்மோ காரை சச்சின் டெண்டுல்கர் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்த பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி கார்

சுருக்கமாக பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி கார் என்று குறிப்பிடப்படும் இந்த கார் ரூ. 58.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலையில் அறிமுகமாகியுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்த பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி கார்

முற்றிலும் புதிய 6 சிரீஸ் ஜிடி கார், பிஎம்டபுள்யூ-வின் 5 சிரீஸ் ஜிடி காருக்கு மாற்றாக வெளிவந்துள்ளது. தற்போது இந்தியாவில் 5 சிரீஸில் மாடலில் 630ஐ ஸ்போர்ட்லைன் வேரியன்ட் மட்டுமே விற்பனையில் உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்த பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி கார்

பிஎம்டபுள்யூவின் புதிய 6 சிரீஸ் ஜிடி கார் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸின் லாங்-வீல்பேஸ் கொண்ட மாடலாக உள்ள இ-கிளாஸிற்கு போட்டியாக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

புதிய பிஎம்டபுள்யூ 630ஐ ஜிடி காரில் டார்போசார்ஜிடு 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 254 பிஎச்பி பவர் மற்றும் 400 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்த பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி கார்

ரியர் சக்கரங்களுக்கு பவரை கடத்தும் வகையில் இயங்கும் இந்த காருக்கு 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை 6.3 நொடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த கார் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும்.

சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்த பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி கார்

பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி கார் 5091 மிமீ நீளம், 1902 மிமீ அகலம், 1538 மிமீ உயரம் மற்றும் 3070 மிமீ வீல்பேஸை பெற்றுள்ளது.

பூட் பகுதியில் கொள்ளவு 600 லிட்டராக உள்ளது. பின் இருக்கைகளை மடித்தால் இதை 1800 லிட்டர் வரை அதிகப்படுத்தலாம்.

வடிவமைப்பு & அம்சங்கள்

வடிவமைப்பு & அம்சங்கள்

5 சிரீஸ் செடான் காரை பின்பற்றி தான் பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி காரின் வடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 சிரீஸ் கார் போலில்லாமல், 6 சிரீஸ் காரின் அம்சங்கள் கூபே காரின் அம்சங்களை பெற்றுள்ளன.

சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்த பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி கார்

பிஎம்டபுள்யூ 5 சிரீஸ் காரில் இருப்பது போன்ற அடேப்டிவ் முகப்பு விளக்குகள் புதிய 6 சிரீஸ் ஜிடி காரில் இடம்பெற்றிருப்பது சிறப்பாக உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்த பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி கார்

இந்த காரின் உள்கட்டமைப்பில், இருக்கைகள் உயர் ரக லெதர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. சைகை கட்டளைகளை ஏற்கும் தொழில்நுட்பம் பெற்ற 10.25 இஞ்ச் இன்ஃபொடெயின்மென்ட் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்த பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி கார்

இதுதவிர, ஹெட்-அப் டிஸ்பிளே, 4 சோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், சூழலுக்கு ஏற்ப ஒளிரும் எல்.இ.டி லைடிங், 16 ஸ்பிக்கர்கள் கொண்ட1400 வாட் பவர்ஸ் & வில்கின்ஸ் டைமன்டு சரவுண்டு சவுண்டு சிஸ்டம் ஆகியவை புதிய பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி காரில் உள்ளன.

சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்த பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி கார்

சர்வதேச சந்தைக்கான பிஎம்டபுள்யூ லைனப்பில் முக்கிய தயாரிப்பாக இந்த 6 சிரீஸ் ஜிடி கார் வெளிவந்துள்ளது. மேலும் இதன் செடான்-கூபே வடிவம் தனிக்கவனம் பெறுகிறது.

சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்த பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி கார்

ஆடம்பர கார் விரும்பிகளுக்கு ஏற்ற அதே சமயத்தில் புதிய 6 சிரீஸ் ஜிடி காரை சொகுசான தேவைகளுடன் பிஎம்டபுள்யூ தயாரித்திருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டிய வகையில் அமைந்துள்ளது.

English summary
Read in Tamil: Sachin Launches BMW 6 Series GT In India - Priced At Rs 58.9 Lakhs. Click for Details...
Story first published: Thursday, February 8, 2018, 13:18 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark