ரூ. 1.43 கோடியில் புதிய பிஎம்டபுள்யூ எம் 5 கார் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபுள்யூ நிறுவனம் புதிய எம் 5 காரை ரூ. 1.43 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிய பிஎம்டபுள்யூ எம்5 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியாவில் வெளியிடுவதற்கு முன்னதாக பிஎம்டபுள்யூ எம்5 (எஃப் 90) கார் 2017 ஃபிராங்க்பூர்ட் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

அதிவேகம் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனை பெற்றுள்ள இந்த கார் ஆல்-வீல் டிரைவிங் சிஸ்டம் கொண்டதாக உள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

4.4 லிட்டர் ட்வின்-டர்போ வி8 எஞ்சினை பெற்றுள்ள இந்த கார் 592 பிஎச்பி பவர் மற்றும் 750 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும் இதில் 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

புதிய பிஎம்டபுள்யூ எம்5 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய எம் எக்ஸ் டிரைவ் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் பெற்றுள்ள புதிய பிஎம்டபுள்யூ எம் 5 கார், அதிவேக மற்றும் அட்வென்ச்சர் பயணங்களுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும்.

புதிய பிஎம்டபுள்யூ எம்5 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

துவக்க நிலையில் இருந்து 3.4 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிப்பிடித்து விடும் என இந்த காரை தயாரித்த பிஎம்டபுள்யூ நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய பிஎம்டபுள்யூ எம்5 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

4965 மிமீ நீளம், 1903 மிமீ அகலம், 1473 மிமீ உயரம் கொண்ட புதிய பிஎம்டபுள்யூ எம்5 காரின் வீல்பேஸ் 2982 மிமீ. ப்ரீடெசஸ்ஸருடன் ஒப்பிடும் போது இந்த காரின் வேகம், எடை மற்றும் அளவு என எல்லாம் ரொம்பவே அதிகம் தான்.

புதிய பிஎம்டபுள்யூ எம்5 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

19-இஞ்ச் அளவு கொண்ட சக்கரங்கள் இந்த காரில் உள்ளன. காரின் முன்பக்க சக்கரத்தில் 394 மிமீ ஸ்டீல் டிஸ்க் பிரேக் உள்ளது. அதேபோல பின் பக்க சக்கரத்தில் 381 மிமீ அளவு கொண்ட பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபுள்யூ எம்5 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

20-இஞ்ச் அளவு கொண்ட சக்கரங்களை பெற்ற பிஎம்டபுள்யூ எம்5 காரை வாங்குவோர் கார்பன் செராமிக் பிரேக்கிற்கு காரை மாற்றிக்கொள்ளலாம்.

வடிவமைப்பு & அம்சங்கள்

வடிவமைப்பு & அம்சங்கள்

மிகவும் கூர்மையான டிசைன் அமைப்புகளை பெற்றுள்ள பிஎம்டபுள்யூ எம்5 காரின் முன்பக்கத்தில் காற்றை உள்ளிழுக்கும் பெரிய பம்பர் மற்றும் லோயர் ஸ்ப்ளிட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய பிஎம்டபுள்யூ எம்5 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

அதேபோல பக்கவாட்டு பகுதியில் சக்கரத்தின் ஆர்க்குகள் கொஞ்சம் பெரியளவில் உள்ளது. பின்பகுதியில் ரியர் பம்பர் மற்றும் குவாட் எக்ஸாஸ்டு பம்புகள் அமைந்துள்ளன.

புதிய பிஎம்டபுள்யூ எம்5 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியாவில் செயல்திறன் மிக்க 5சீரிஸ் கரை வெளியாகியிருப்பது கார் ஆர்வலர்களுக்கு உற்சாகமான அறிவிப்பாக உள்ளது. அதிக செயல்திறனை இந்த கார் பெற்றிருந்தாலும், இதில் ஆல்-வீல் டிரைவிங் சிஸ்டம் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

புதிய பிஎம்டபுள்யூ எம்5 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இது ஒருவேளை பிஎம்டபுள்யூவின் எம் வரிசை கார் ஆர்வலர்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால் இதில் கூடுதலாக ரியர் வீல் டிரைங் மோடும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

English summary
Read in Tamil: BMW M5 Launched In India At Rs 1.43 Crore - Specifications, Features & Images. Click for Details...
Story first published: Wednesday, February 7, 2018, 21:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark