பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எம் ஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 எம் ஸ்போர்ட் எஸ்யூவியின் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் sDrive20d என்ற பெயரில் புதிய வேரியண்ட்டாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

By Saravana Rajan

பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 எம் ஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எம் ஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 எம் ஸ்போர்ட் எஸ்யூவியின் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் sDrive20d என்ற பெயரில் புதிய வேரியண்ட்டாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வழக்கம்போல் பிஎம்டபிள்யூ எம் வரிசை பெர்ஃபார்மென்ஸ் கார்களுக்குரிய ஏராளமான கூடுதல் சிறப்பம்சங்களை இந்த புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 எம் ஸ்போர்ட் மாடல் பெற்றிருக்கிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எம் ஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 எம் ஸ்போர்ட் sDrive20d மாடலில் விசேஷ பம்பர் அமைப்பு, அகலமான ஏர் டேம் பகுதி, பம்பருடன் இணைக்கப்பட்ட டிஃபியூசர், சைடு ஸ்கர்ட், பாடி கிளாடிங் போன்ற ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது காரின் ஏரோடைனமிக்ஸை சற்றே அதிகரிக்க உதவுகின்றன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எம் ஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

முன்புறத்தில் சிறுநீரக வடிவ க்ரில் அமைப்பில் விசேஷ கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு வசீகரிக்கிறது. இந்த காரில் 18 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இருக்கும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எம் ஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

மேலும், டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஆம்பியன்ட் லைட்டிங், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், பனரோமிக் சன்ரூஃப், 6.5 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எம் ஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பேடில் ஷிஃப்ட் மூலமாக மேனுவலாக கியர் மாற்றும் வசதி, லான்ட்ச் கன்ட்ரோல் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எம் ஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட் வசதியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், ரன் ஃப்ளாட் டயர்கள் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் நிரந்தர அம்சமாக இடம்பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எம் ஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ரூ.41.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்ட்ரைவ்20டீ எம் ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் விற்பனைக்கு வந்து சூப்பர்ஹிட் மாடலாக மாறி இருக்கும் வால்வோ எக்ஸ்சி40, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, ஆடி க்யூ3 உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
BMW India has introduced the front-wheel-drive sDrive20d variant of the X1 in M-Sport trim starting at Rs 41.50 Lakh (ex-showroom India).
Story first published: Tuesday, July 31, 2018, 17:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X