பிஎம்டபுள்யூ-வின் புதிய எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் கார் ரூ. 94.15 லட்சம் விலையில் அறிமுகம்

Written By:

நடைபெற்றுக்கொண்டு இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபுள்யூ நிறுவனம் புதிய எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் காரை ரூ. 94.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பிஎம்டபுள்யூ எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!!

பெட்ரோல் வேரியன்ட் மாடலான இந்த கார் துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 6.4 நொடிகளில் எட்டிப்பிடித்து விடும். சிறந்த செயல்திறனுக்கான முனைப்போடு தயாராகியுள்ள பிஎம்டபுள்யூ எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் கார் மணிக்கு 240 கி.மீ வேகத்தில் பயணிக்கும்.

பிஎம்டபுள்யூ எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!!

இந்த காரில் பிஎம்டபுள்யூ நிறுவனம், லாஞ்ச் கண்ட்ரோல் சிஸ்டத்தை பொருத்தியுள்ளது. இது எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் காரின் இயக்கத்திற்கு சிறந்த செயல்பாட்டை தருகிறது.

மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள துடுப்பு ஷிப்டர்களை வைத்து இயக்குநர் எக்ஸ்6 காரில் ஏற்படும் கியர்பாக்ஸ் மாற்றங்களை கட்டுப்படுத்தலாம்.

வடிவமைப்பு & அம்சங்கள்

வடிவமைப்பு & அம்சங்கள்

எக்ஸ் 6 காரிலிருந்து அதே ஸ்போர்டி அம்சங்கள் தான் இந்த புதிய எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்டபுள்யூ எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!!

இந்த எஸ்யூவி மாடலின் வெளிப்புற கட்டமைப்பில் அடேப்டிவ் முகப்பு விளக்குகள், 20 இஞ்ச் அலாய் சக்கரங்கள், மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க அப்ரன் உள்ளன. பெரியளவிலான காற்று உள்ளீடுகள், சைடு ஹில்ஸ் இவற்றுடன் கூடுதலான கிரேக்டர் லைனில் வழங்கப்பட்டுள்ளன.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
பிஎம்டபுள்யூ எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!!

பிஎம்டபுள்யூ எக்ஸ்6 எக்ஸ் டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் காரின் உள்கட்டமைப்பில் உயர் ரக லெதர் வேலைபாடுகள், மின்சார திறனில் இயங்கும் இருக்கைகள், ஹெட்லைனர், அலுமினியத்தாலான அறுங்கோண உள்கட்டமைப்பு டிரிம் மற்றும் கதவில் எம் லோகோ என அனைத்தும் அம்சங்களும் அசரடிக்கின்றன.

பிஎம்டபுள்யூ எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!!

செயல்திறனில், வடிவமைப்புகளிலும் மட்டுமில்லாமல் பிஎம்டபுள்யூ நிறுவனம் இந்த காரை உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டமைத்துள்ளது.

பிஎம்டபுள்யூ எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!!

அதன்படி டைனமிக் டிரான்சிங் கண்ட்ரோல் (டிடிசி), கார்னிங் ப்ரேக் கண்ட்ரோல் (சிபிசி), கார் நிறுத்துமிடம், ஹில் டிசெண்ட் கண்ட்ரோல் (ஹெச்.டி.சி), பக்க-தாக்கம் பாதுகாப்பு, மின்னணு வாகன இம்மொபிலைஸர், விபத்து சென்சார் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பிஎம்டபுள்யூ எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் கார் அறிமுகம்..!!

பிஎம்டபுள்யூ எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 35ஐ எம் ஸ்போர்ட் கார், எக்ஸ்6 மாடலின் எஸ்யூவி கூபே கிராஸோவர் ஆகும். இதிலிருக்கும் டீசல் மாடலை விட இந்த பெட்ரோல் வேரியன்ட் வாடிக்கையாளர்களை பெரியளவிலை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil: BMW X6 xDrive35i M Sport Launched At Rs 94.15 Lakh. Click for Details...
Story first published: Friday, February 9, 2018, 13:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark