ஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்

இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் ஒவ்வொரு 3 கி.மீ. தூரத்திற்குள் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்கள் மீது மவுசு அதிகரிக்கும் என்பதால்

By Balasubramanian

இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் ஒவ்வொரு 3 கி.மீ. தூரத்திற்குள் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்கள் மீது மவுசு அதிகரிக்கும் என்பதால் கட்டமைப்பு பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்; இனி துணிந்து எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்

உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் பல எலெக்ட்ரிக் வாகனம் நோக்கி நகர்ந்து விட்ட நிலையில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் தற்போது தான் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பை பெற்று வருகிறது.

ஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்; இனி துணிந்து எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்

தற்போது மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் மையங்கள் அமைக்க முயற்சி செய்து வருகிறது. எலெக்ட்ரிக் சார்ஜ் செய்யும் மையங்கள் அதிகரித்தால் தான் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க முடியும். அப்பொழுது தான் பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களுக்கான பயன்பாடு குறையும்.

ஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்; இனி துணிந்து எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்

தற்போது அரசு 10 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் பகுதி அல்லது ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படும் என்றும்,

ஊருக்கு வெளிப்புறம் உள்ள ரோடு பகுதியில் ஒவ்வொரு 50 கி.மீ. தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்; இனி துணிந்து எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்

அதே போல் சார்ஜ் ஸ்டேஷன் அமைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு அரசு மானியமும், முனிசிபல் அத்தாரிட்டி மூலம் இடம் பெற்று தரவும் உதவி செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சார்ஜ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிகிறது.

ஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்; இனி துணிந்து எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது : "வரும் 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 30 ஆயிரம் மெதுவாக சார்ஜ் ஏற்றும் மையங்களும், 15 ஆயிரம் வேகமாக சார்ஜ் ஏற்றும் மையங்களும் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இதில் சிட்டி பகுதிகளில் ஒவ்வொரு 50 கி.மீ. தூரத்திற்கும் ஒரு சார்ஜ் ஏற்றும் மையம் நிறுவப்பட்டிருக்க வேண்டும்" என கூறினார்.

ஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்; இனி துணிந்து எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்

முதற்கட்டமாக எந்தெந்த பகுதிகளில் எலெக்ட்ரிக் சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்கப்படலாம் என்பது குறித்த உள்ளூர் நிர்வாகத்திடமும், மின் வாரியத்துடனும் முதலில் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு எலெக்ட்ரிக் கார் சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ விருப்பபடும் நிறுவனங்களுக்கு இந்த இடம் ஒதுக்கப்படும்.

ஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்; இனி துணிந்து எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்

பொதுத்துறை நிறுவனங்களான என்.டி.பி.சி., பவர்கிரிட், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர்களிடம் ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை பயன்படுத்தி தனித்தனியாகவோ அல்லது ஒன்றாக சேர்ந்தோ சார்ஜ் ஏற்றும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்; இனி துணிந்து எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்

என்.டி.பி.சி. நிறுவனம் ஏற்கனவே மஹாராஷ்டிரா பகுதியில் எலெக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷன்களை கட்டமைக்கும் பணிகளை துவங்கி விட்டது. பவர் கிரிட் நிறுவனம் எல் &டி மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஐதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்; இனி துணிந்து எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்

அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ள அரசு தற்போது மஹேந்திரா மற்றும் டாடா நிறுவனவங்களில் 10 ஆயிரம் வாகனங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. ஓலா, உபேர் போன்ற டாக்ஸி நிறுவனங்களையும் இந்தியாவில் சில இடங்களில் எலெக்ட்ரிக் கார்கள் மூலம் டாக்ஸிகளை இயக்க வைக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்; இனி துணிந்து எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்

இது போல் இந்தியா முழுவதும் விரைவில் எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெட்ரோல் டீசல் வாகனங்களால் அரசு சந்தித்து வந்த பெரும் பிரச்னை இனி கட்டுக்குள் வரும். பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்து சாதாரண மக்கள் கவலைப்படுவதற்கான தேவை வெகுவாக குறைந்து போய்விடும்.

ஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்; இனி துணிந்து எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்

மேலும் எலெக்டரிக் வாகனங்கள் சுற்றுசூழலுக்கு உற்ற நண்பனான விளங்குகிறது. இது எந்த வித மாசுவையும் ஏற்படுத்துவதில்லை. நீங்களும் விரைவில் கார், அல்லது ஸ்கூட்டர் வாங்க முடிவு செய்துள்ளீர்கள் என்றால் எலெக்ட்ரிக் காரையும் ஒரு சாய்ஸ் ஆக எடுத்து கொண்டு பரிசீலனை செய்யுங்கள், உங்கள் பட்ஜெட் மற்றும் பயன்பாட்டிற்கு எலெக்ட்ரிக் கார்கள் ஒத்து வந்தால் அதை வாங்குவது தான் சிறந்தது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல மவுசு காத்திருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Car charging station to be set up every 3 km in India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X