ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு வரும் புதிய கார் மாடல்கள்!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட கார்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கார்களின் விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட கார்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கார்களின் விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

01. ஹோண்டா அமேஸ்:

01. ஹோண்டா அமேஸ்:

புதிய மாருதி டிசையர் கார் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அந்த செக்மென்ட்டில் மிக முக்கிய போட்டியாளரான ஹோண்டா அமேஸ் காருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடியை தவிர்த்துக் கொள்வதற்காக புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கார்கள்!

தாழ்வாக இருந்த பானட் உயர்த்தப்பட்டிருப்பதுடன், புதிய முக அமைப்பு வசீகரமாக மாற்றம் கண்டிருக்கிறது. அதேபோன்று, பின்புற அமைப்பிலும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது இரண்டாம் தலைமுறை மாடலாக மாறி இருக்கிறது. வழக்கம்போல் ஹோண்டா பிரியர்களுக்கு மிகச் சிறந்த காம்பேக்ட் ரக செடான் காராக இப்போது ஹோண்டா அமேஸ் மாறி இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கார்கள்!

வழக்கம்போல் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைகு வர இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழக்கமாக இருக்கும். சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் புதிய தேர்வாக அமைய இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட், 15 அங்குல அலாய் வீல்கள், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 6 லட்சம் ஆரம்ப விலையில் வரும் வாய்ப்புள்ளது.

02. டொயோட்டா யாரிஸ்:

02. டொயோட்டா யாரிஸ்:

ஆட்டோ எக்ஸ்போவில் வசீகரித்த டொயோட்டா யாரிஸ் செடான் கார் அடுத்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு போட்டியாக இந்த கார் வர இருக்கிறது.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கார்கள்!

டொயோட்டா யாரிஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105.5 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கார்கள்!

டொயோட்டா எட்டியோஸ் காரில் இருக்கும் அதே பெட்ரோல் எஞ்சின்தான் இது என்றாலும், கூடுதலாக 15.5 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கிறது. டீசல் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.8.5 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகமாக இருக்கிறது.

03. ஹூண்டாய் கோனா

03. ஹூண்டாய் கோனா

ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் அரங்கை அலங்கரித்த கோனா காம்பேக்ட் எஸ்யூவி மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கார்கள்!

வெளிநாடுகளில் பெட்ரோல், டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் மின்சார மாடலாக களமிறங்க இருக்கிறது. இந்த எஸ்யூவியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 390 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் படைத்தாக இருக்கும். ரூ.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

04. ஹோண்டா CR- V டீசல்

04. ஹோண்டா CR- V டீசல்

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஹோண்டா சிவிக் காரின் டீசல் மாடல் பெரிதும் கவர்ந்தது. முதல்முறையாக டீசல் மாடல் வந்திருப்பது இந்தியர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கார்கள்!

இந்த எஸ்யூவியில் இருக்கும் 1.6 லிட்டர் டவின் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஸ்யூவியில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலும் வழக்கம்போல் வர இருக்கிறது. இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வர இருக்கிறது.

05. மஹிந்திரா ரெக்ஸ்டன்

05. மஹிந்திரா ரெக்ஸ்டன்

ஆட்டோ எக்ஸ்போவில் பலரின் புருவத்தையும் உயர்த்திய மாடல் மஹிந்திரா அரங்கில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்த புதிய தலைமுறை ரெக்ஸ்டன் எஸ்யூவிதான். சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியானது மஹிந்திரா பேட்ஜுடன் நிறுத்தப்பட்டிருந்ததுதான் காரணம்.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கார்கள்!

சாங்யாங் பிராண்டை தவிர்த்து, மஹிந்திரா பிராண்டிலேயே இந்த எஸ்யூவி வர இருப்பதாக தெரிகிறது. எனினும், இந்த புதிய எஸ்யூவி மஹிந்திரா பிராண்டில் வெளிவருமா என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை இல்லை. அப்படி மஹிந்திரா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டால் புத்தம் புதிய மாடலாக இருக்கும் என்பதால் நிச்சயம் வரவேற்பை பெறும்.

06. ஹோண்டா சிவிக்

06. ஹோண்டா சிவிக்

புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் இந்த கார் ஹோண்டா பிரியர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கார்கள்!

இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 187 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். டீசல் மாடலில் 1.6 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்த வல்லது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கிறது.

07. மஹிந்திரா இ-கேயூவி100

07. மஹிந்திரா இ-கேயூவி100

மஹிந்திரா நிறுவனத்தின் முதல் தனிநபர் மார்க்கெட்டுக்கான இ-கேயூவி100 என்ற மின்சார மாடல் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. பட்ஜெட் விலையிலான மின்சார எஸ்யூவி மாடலாக இருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கார்கள்!

மஹிந்திராவெரிட்டோ மின்சார மாடலில் இருக்கும் அதே 30kW மின் மோட்டாரும், லித்தியம் அயான் பேட்டரியும்தான் இந்த எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பேட்டரியை சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். விற்பனைக்கு வரும்போது பேட்டரி மற்றும் மின் மோட்டாரும் பயன்படுத்தப்பட இருக்கிறது. ரூ.10 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

08. மெர்சிடிஸ் இ க்ளாஸ் ஆல் டெர்ரெய்ன்

08. மெர்சிடிஸ் இ க்ளாஸ் ஆல் டெர்ரெய்ன்

வகை வகையான சொகுசு கார் மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு ஆஃப்ரோடு ரக சொகுசு கார் மாடலை காட்சிக்கு நிறுத்தி இருந்தது. மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் அடிப்படையிலான எஸ்டேட் ரக கார் மாடலாக உருவாக்கப்பட்டிருந்த இந்த கார் இ க்ளாஸ் ஆல்டெர்ரெய்ன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, அனைத்து வகை சாலை நிலைகளுக்கும் ஏற்றதாக குறிப்பிடப்படுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கார்கள்!

இந்த கார் அதிக தரை இடைவெளி கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பென்ஸ் இ க்ளாஸ் சொகுசு காரைவிட ஆல்டெர்ரெய்ன் மாடல் தரை இடைவெளி 29 மிமீ வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 19 அங்குலம் அல்லது 20 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் 191 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. ரூ.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த கார் இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர்பபடும் வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Cars From Auto Expo 2018 Launching Soon In India.
Story first published: Thursday, February 15, 2018, 18:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X