டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

இந்தியாவில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான விபத்துக்கள் நடக்கிறது. இதில் சில விபத்துக்கள் பெரியதாகவும், சில விபத்துக்கள் சிறியதாகவும் இருக்கின்றன. எனினும் விபத்துக்களில் ஏற்படும் இழப்புகளின் மதிப்பு அதி

இந்தியாவில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான விபத்துக்கள் நடக்கிறது. இதில் சில விபத்துக்கள் பெரியதாகவும், சில விபத்துக்கள் சிறியதாகவும் இருக்கின்றன. எனினும் விபத்துக்களில் ஏற்படும் இழப்புகளின் மதிப்பு அதிகம்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

ஆண்டுதோறும் இந்தியாவில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் பெரும் அளவில் எந்த முயற்சியும் இதுவரை நல்ல பலனை தரவில்லை.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

விபத்துக்கள் எல்லாம் ஒரு புறம் நடக்க, விபத்துக்களால் ஏற்படும் நஷ்டங்கள் எவ்வாறு சரி செய்யப்படுகிறது? என்ற கேள்வி பலருக்கு உள்ளது. இது என்ன கேள்வி? அதான் இன்சூரன்ஸ் இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

இன்சூரன்ஸ் என்பது விபத்தில் சிக்கும் மனிதர்களுக்கும், அவர்கள் பயன்படுத்திய கார்களுக்கும்தான். தற்போது ஒரு பாலத்தில் செல்லும் போது பாலத்தின் சுவரை இடித்து கொண்டு ஒரு வாகனம் விபத்திற்குள்ளானால், அந்த வாகனத்திற்கும், அதில் சென்ற நபருக்கும் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

இந்த பாலத்தை யார் சரி செய்ய வேண்டும்? இந்த பாலத்தை கட்டிய பொதுப்பணித்துறையா? அல்லது பாலத்தை நிர்வகிக்கும் உள்ளாட்சி அமைப்பா? அல்லது இந்த விபத்தை ஏற்படுத்தியவர்களா?

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

கண்டிப்பாக விபத்தை ஏற்படுத்தியவர்கள் இதை செய்யப்போவது இல்லை. அது நமக்கு தெளிவாக தெரியும். உள்ளாட்சி அமைப்போ அல்லது விபத்து நடந்த பகுதி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை என யார் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ? அவர்கள்தான் சரி செய்வார்கள்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

யார் சரி செய்தாலும் அதற்காக அரசின் பணம்தான் செலவாகும். எப்படியோ அது நமது வரிப்பணம்தான். ஆனால் இப்படி விபத்தில் சேதமடைந்த பொது சொத்துக்கள் உடனடியாக சரி செய்யப்படுவதில்லை. மாறாக இந்த இடம் குறித்து குறிப்பிட்ட துறைக்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார் சென்ற பிறகே இதை சரி செய்கின்றனர்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

தாமதம் குறித்து காரணம் கேட்டால் இது இவ்வாறு விபத்தில் சிக்கிய தகவலே தங்களுக்கு தெரியாது என தெரிவிக்கின்றனர். இதுவும் ஒரு வகையில் பார்த்தால் நியாயம்தான். தினமும் நூற்றுக்கணக்கான விபத்துக்கள் நடக்கிறது. அதில் பல விபத்துக்கள் போலீசாரின் கவனத்திற்கே செல்வதில்லை. பின் எப்படி சேதமடைந்த பொது சொத்தை பராமரிக்கும் துறைக்கு அதன் கவனம் செல்லும்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

இது இந்தியா முழுவதும் பெரும் சிக்கலாக இருந்தது. இதை சமாளிக்க என்ன செய்வது என்று பல அதிகாரிகள் திணறி வருகின்றனர். ஒரு விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் சென்றால் அதில் பொதுப்பணித்துறையின் பங்கு இருந்தாலும் இது குறித்த தகவல் பொதுப்பணித்துறைக்கு செல்வதில்லை. இப்படியான பிரச்னை வளர்ச்சிக்கு மிகவும் சிக்கலானது.

Recommended Video

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

இந்த பிரச்னைகள் குறித்து உணர்ந்த மத்திய அரசு இதற்கு தீர்வு காண குழு ஒன்றை அமைத்து அந்த குழு மூலம் ஆய்வு மேற்கொண்டு இதை எப்படி சமாளிப்பது ஒரு சம்பவம் குறித்த தகவல்களை அந்தந்த துறைக்கு கொண்டு செல்ல என்ன செய்வது என ஆய்வு செய்தது.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

அந்த குழு தற்போது ஒருங்கிணைக்கப்பட்ட சாலை விபத்து மேம்பாட்டு அமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். இது குறித்து ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுடன் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை இணை செயலாளர் அபே டாம்லே கலந்து கொண்டு பேசினார்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

இந்திய ஆட்டோமொபைல்ஸ் தயாரிப்பாளர்கள் சொசைட்டி மற்றும் ஏசிஎம்ஏ - விடிஏ இணைந்து பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் அவர் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட சாலை விபத்து மேம்பாட்டு அமைப்பு குறித்து பேசினார்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

இதன் மூலம் இந்தியாவில் விபத்துக்களை தடுப்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்றும், விபத்து மூலம் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் உடனடியாக சம்மந்தப்பட்டவர்களை சென்றடையும் என்றும் கூறினர்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

ஒருங்கிணைக்கப்பட்ட சாலை விபத்து மேம்பாட்டு அமைப்பு என்பது ஒரு சாலையில் விபத்து நடந்தால் அது குறித்த முழு தகவல் எந்த துறைக்கு முதலில் கிடைக்கிறதோ அவர்கள் அந்த குறிப்பிட்ட அமைப்பில் விபத்து குறித்த தகவல்களை பதிவேற்றம் செய்வார்கள். அந்த தகவல்கள் அந்த விபத்தில் சம்மந்தப்பட்ட துறைக்கு உடனடியாக சென்று விடும்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

உதாரணமாக ஒரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பெரும் விபத்து நிகழ்ந்து விட்டது என எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் இந்த தகவல் ஆம்புலன்ஸிற்கு செல்லும். அவர்கள் முதலில் சில தகவல்களை அந்த அமைப்பில் பதிவேற்றம் செய்வார்கள். அவர்கள் விபத்து நடந்த இடம், விபத்தின் தன்மையை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்தவுடன் இது குறித்த தகவல் போலீசிற்கு சென்று விடும்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைவார்கள். சம்பவ இடத்தில் இருந்து யாரும் போலீசாருக்கு தகவல் அனுப்பாவிட்டாலும் விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றும் ஆம்புலன்ஸ் மூலம் போலீசாருக்கு தகவல் செல்லும். அவர்கள் சென்றதும் விபத்து நடந்த வாகனங்கள், விபத்தில் சிக்கியவர்கள், விபத்தில் சேதமடைந்த பொருட்கள் குறித்து அந்தஅமைப்பில் பதிவேற்றம் செய்வார்கள்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

இந்த விபத்தில் சாலை ஒரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்து, சாலை அருகே இருந்த மின் கம்பமும் சேதமடைந்தது என வைத்துக்கொள்வோம். அவர்கள் இது குறித்த தகவல்களை தங்கள் வழக்கிற்காக பதிவேற்றம் செய்வார்கள்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

அவர்கள் அதை செய்தவுடன் சாலை ஓரம் உள்ள தடுப்பு கம்பிகளுக்கு பொறுப்பான நெடுஞ்சாலை துறைக்கோ அல்லது சாலை பராமரிப்பை மேற்கொண்டு வரும் நெடுஞ்சாலைத்துறைக்கோ அல்லது சாலையை பாராமரிக்கும் ஏஜென்ஸிக்கோ அந்த தகவல் சென்று விடும். மேலும் சேதமான மின் கம்பம் குறித்து அப்பகுதி மின் வாரியத்திற்கு உடனடியாக தகவல் சென்று விடும்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

இந்த சிஸ்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதால் விபத்துக்களால் ஏற்படும் சேதங்கள் உடனடியாக சரி செய்யப்படும். மேலும் இது போன்ற விபத்துக்களுக்கு என்ன காரணம்? அதை எப்படி தடுப்பது? என்ற ஆய்விற்கு இந்த தகவல்கள் பயன்படும்.

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

இதன் மூலம் உண்மையாக விபத்துக்கள் ஏற்படும் காரணத்தை அறிந்து அதற்கு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.

இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்!

டிஜிட்டல் இந்தியாவில் இது கூட சாத்தியமா? விபத்தில்லா புதிய இந்தியாவிற்கு மோடி அரசு தீவிர முயற்சி

மத்திய அரசின் இந்த முயற்சி நிச்சயம் பெரிய அளவில் பலனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் உள்கட்டமைப்பில் உள்ள பிரச்னைகள், சேவைகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை விரைவாக சரி செய்ய முடியும் என எதிர்பார்க்க முடிகிறது.

Most Read Articles
English summary
central govt planning for integrated accident management system.Read in Tamil
Story first published: Wednesday, November 21, 2018, 13:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X