ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான கார் மாடல்கள்!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வித்தியாசமான கார் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சில வித்தியாசமான கார் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

 01. ரெனோ 'தி கான்செப்ட்'

01. ரெனோ 'தி கான்செப்ட்'

ஆட்டோ எக்ஸ்போவில் ரெனோ கார் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த The Concept என்ற பெயரிலான புதிய மாதிரி கார் மாடல் எல்லோரையும் கவர்ந்தது. இந்த கான்செப்ட் கார் சென்னை மற்றும் மும்பையில் உள்ள ரெனோ டிசைன் ஸ்டூடியோவில் இந்தியர் அதிகாரியின் தலைமையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா 45எக்ஸ் கார் போன்றே இது பிரிமியம் ஹேட்ச்பேக் கார் ஒன்றை உருவாக்குவதற்கான மாதிரி மாடலாக கூற முடியும்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான கார் மாடல்கள்!

மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ணக் கலவையில் இந்தத கார் வர்ணம் பூசப்பட்டு இருக்கிறது. உல்லாச படகுகளில் இருப்பது போன்ற படிக்கட்டு அமைப்பு, கதவுகள் மற்றும் பின்புற டிசைன் தோற்றமளிக்கிறது. இதனை மேம்படுத்தி இந்தியாவில் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை ரெனோ கார் நிறுவனம் உருவாக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. எல்இடி ஹெட்லைட், பிரம்மாண்டமான சக்கரங்கள் போன்றவை இந்த காருக்கு சிறப்பு சேர்க்கின்றன.

02. சுஸுகி இ- சர்வைவர்

02. சுஸுகி இ- சர்வைவர்

ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி அரங்கத்தில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த மாடல் சுஸுகி இ - சர்வைவர் என்ற கான்செப்ட் மாடல். மிக வித்தியாசமாக வடிவமைப்பு பெற்றிருக்கும் இந்த கன்வெர்ட்டிபிள் ரக எஸ்யூவி கான்செப்ட் பேட்டரியில் இயங்கும் மின்சார 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட எஸ்யூவி மாடல். அதாவது, ஆஃப்ரோடு பிரியர்களுக்கான எஸ்யூவி மாடலுக்கான முன்னோட்டமாக இது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான கார் மாடல்கள்!

சுஸுகி ஜிம்னி எஸ்யூவியை எதிர்காலத்தில் மின்சார மாடலுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இந்த சுஸுகி இ- சர்வைவர் மாடலில் இருந்து துவங்கப்படலாம் என்பது எதிர்பார்ப்பு. இந்த எஸ்யூவியில் மிக நவீன தகவல் தொழில்நுட்ப சாதனம் பொருத்தப்பட்டு இருரக்கிறது.முன்புறத்தில் மிக கம்பீரமான க்ரில் அமைப்பு, கண்ணாடியுடன் கூடிய கதவுகள், தனித்துவமான சக்கரங்களுடன் அதிக தரை இடைவெளி கொண்ட மின்சார எஸ்யூவி கான்செப்ட் மாடலாக காட்சி தருகிறது.

Recommended Video

Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
03. மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர்

03. மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர்

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியின் அடிப்படையிலான திறந்து கூரை அமைப்புடைய மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. டியூவி 300 எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தாலும், மேம்படுத்தப்பட்ட முக அமைப்பு, பக்கவாட்டு அமைப்பு மற்றும் புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் டிசைன் போன்றவை முற்றிலும் வேறுபடுத்தி காட்டுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான கார் மாடல்கள்!

இந்த மாதிரி கார் மாடலானது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருக்கிறது. 4 பேர் செல்வதற்கான இருக்கை வசதி இடம்பெற்றிருக்கிறது. முன்புறத்தில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. எல்இடி ஹெட்லைட், க்ரோம் க்ரில் அமைப்பு, வலிமையான தோற்றமுடைய சக்கரங்கள் சிறப்பு சேர்க்கும அம்சங்கள். தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்துவது குறித்து இதுவரை தகவல் இல்லை.

04. மாருதி ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட்

04. மாருதி ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட்

எஸ்யூவி மார்க்கெட்டில் பிரெஸ்ஸா மூலமாக சிறப்பான வர்த்தகத்தை பெற்றுவிட்ட மாருதி, அடுத்து இந்த மார்க்கெட்டில் மற்றொரு மாடலை களமிறக்க முடிவு செய்துள்ளது. பட்ஜெட் கார் மார்க்கெட்டில் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக பட்ஜெட் விலை எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக மாருதி ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் என்ற எஸ்யூவியின் மாதிரி மாடலை அறிமுகம் செய்தது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான கார் மாடல்கள்!

பிரெஸ்ஸா எஸ்யூவியைவிட விலை குறைவாக வர இருப்பதால் எல்லோரின் கவனமும் இந்த காரின் மீது விழுந்துள்ளது. இந்த எஸ்யூவியின் டிசைனும் மிக வித்தியாசமாக இருக்கிறது. எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், வலிமையான முக அமைப்பு, சக்கரங்களுடன் கவர்கிறது. இந்த காரில் வெள்ளை வண்ண கோடுகள் மூலமாக கொடுக்கப்பட்டிருக்கும் அலங்காரமும் தயாரிப்பு நிலையிலும் பிரதிபலிக்கலாம். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த மாதிரி கார் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

05. ரெனோ ட்ரஸோர்

05. ரெனோ ட்ரஸோர்

ரெனோ ட்ரஸோர் கான்செப்ட் கடந்த 2016ம் ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கோணத்தில் எதிர்கால கார்களின் வடிவமைப்பை கொண்டு செல்லப்போகிறோம் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இந்த காரை ரெனோ பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இது ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு அடித்தளமான டிசைனாக பார்க்கப்படுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான கார் மாடல்கள்!

ஃபார்முலா ஒன் எலக்டிரிக் பந்தய கார்களில் இருக்கும் மின் மோட்டார் இந்த காரிலும் பயன்படுத்த ரெனோ திட்டமிட்டுள்ளது. இந்தத காரின் மின் மோட்டார் அதிகபட்சமாக 345பிஎச்பி பவரையும், 380என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடும். விரயமாகும் பிரேக் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கும் நுட்பமும் ஃபார்முலா- இ கார்களிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

 06. டாடா ரேஸ்மோ இவி

06. டாடா ரேஸ்மோ இவி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய கார்களை டிசைன் செய்வதில் போட்டியாளர்களை விஞ்சி வருகிறது. அதற்கு சான்றான ஒரு மாதிரி மாடலாக ரேஸ்மோ காரை கூறலாம். கடந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் முதல்முறையாக உலகின் பார்வைக்கு கொண்டு வரப்பட்ட போதே கவனத்தை ஈர்த்ததுடன், டிசைனுக்கான உயரிய விருதுகளையும் பெற்றது. இந்த நிலையில், டாடா ரேஸ்மோ காரின் மின்சார மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான கார் மாடல்கள்!

இந்த காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், மின்சார மாடலில் இடம்பெற்றிருக்கும் மின் மோட்டார் மற்றும் பேட்டரி உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த காரில் இடம்பெறும் மின் மோட்டார் மற்றும் பேட்டரி நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும் என்று நம்பலாம்.

07. யுனிட்டி ஒன்

07. யுனிட்டி ஒன்

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த யுனிட்டி நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடலான யுனிட்டி ஒன் மின்சார கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த காரை இந்தியாவை சேர்ந்த பேர்டு நிறுவனம் அசெம்பிள் செய்து விற்பனை செய்ய இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான கார் மாடல்கள்!

இந்த காரின் மிக முக்கிய அம்சம், ஜாய்ஸ்டிக் மூலமாக காரின் ஸ்டீயரிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருப்பதுதான். இந்த காரின் பேட்டரி வெறும் 20 நிமிடங்களில் 90 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏறிவிடும். முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். வீட்டிலிருந்து சாதாரண முறையில் சார்ஜ் ஏற்றும்போது 3 மணிநேரம் பிடிக்கும். 2019ம் ஆண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

08. மஹிந்திரா யுடோ மற்றும் ஆட்டம் கான்செப்ட்டுகள்

08. மஹிந்திரா யுடோ மற்றும் ஆட்டம் கான்செப்ட்டுகள்

மஹிந்திரா நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் அதிதீவிரம் காட்டி வருவது தெரிந்ததே. அதன் பிரதிபலிப்பு ஆட்டோ எக்ஸ்போவிலும் எதிரொலித்தது. ஆட்டம் மற்றும் யுடோ என்ற இரண்டு புதிய 2 சீட்டர் மின்சார கார் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான கார் மாடல்கள்!

இதில், யுடோ என்பது 2 பேர் செல்வதற்கான மின்சார பாட் டாக்சி போன்ற பயன்பாட்டிற்கும், ஆட்டம் என்பது நகர்ப்புறத்தில் குறுகிய தூரம் பயணிக்க ஏதுவானதாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான வரவேற்பை பொறுத்து அடுத்த கட்ட முயற்சிகளை மஹிந்திரா துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

09. மெர்சிடிஸ் பென்ஸ் கான்செப்ட் இ-க்யூ

09. மெர்சிடிஸ் பென்ஸ் கான்செப்ட் இ-க்யூ

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த இ-க்யூ என்ற மின்சார காரின் மாதிரி மாடல் கவனத்தை ஈர்த்தது. உலகின் பல்வேறு நாட்டு ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த இந்த மாடல் இப்போது இந்தியாவிலும் வந்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான கார் மாடல்கள்!

இந்த மின்சார கான்செப்ட் காரில் 402 பிஎச்பி பவரை வழங்க வல்ல மின்மோட்டார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும். வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் பயணிக்கும் திறன் பெற்றிருக்கிறது.


புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டு ஹோண்டா!

புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டு ஹோண்டா!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு தக்கவாறு புதிய மாடல்களும் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. இந்த சூழலில், காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்குவதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டு ஹோண்டா!

ஹோண்டா ஜாஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டபிள்யூஆர்-வி க்ராஸ்ஓவர் ரக கார் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. விற்பனையிலும் கலக்கி வருகிறது. எனவே, இந்த செக்மென்ட்டில் ஒரு சிறப்பான எஸ்யூவி ரக கார் மாடலை இறக்கினால், வர்த்தகத்தை பலப்படுத்திக் கொள்ள முடியும் என்று ஹோண்டா கருதுகிறது.

புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டு ஹோண்டா!

ஹோண்டா நிறுவனத்தின் 2UA என்ற புதிய பிளாட்ஃபார்மில்தான் இரண்டாம் தலைமுறை மாடலாக ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட ஹோண்டா அமேஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்ஃபார்மில்தான் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை உருவாக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டு ஹோண்டா!

புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவிக்கு கிடைக்க இருக்கும் வர்த்தக வாய்ப்பு குறித்து ஹோண்டா நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வுகள் சாதக அமையும் என்றே கருதப்படுகிறது.

புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டு ஹோண்டா!

"இந்தியாவில் சிறிய கார்களைவிட எஸ்யூவி ரக கார்களுக்கு அதிக வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. எஸ்யூவி மார்க்கெட் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது," என்று எக்கானாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் ஹோண்டா கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யோச்சிரோ யுனோ கூறி இருக்கிறார்.

புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டு ஹோண்டா!

அமேஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட இருக்கும் புதிய எஸ்யூவி மாடல் 4 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் கார்களுக்கு நேர் போட்டியான அம்சங்களுடன் வரும்.

புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டு ஹோண்டா!

தற்போது ஹோண்டா ஜாஸ், அமேஸ் கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. இல்லையெனில், சிட்டி காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பயன்படுத்துவதற்கும் ஹோண்டாவுக்கு வாய்ப்புள்ளது.

புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டு ஹோண்டா!

விற்பனையில் சோபிக்காத மொபிலியோ எம்பிவி காரில் எஸ்யூவி போன்று மாற்றங்களை செய்து பிஆர்வி என்ற பெயரில் அறிமுகம் செய்தது. ஆனால், பிஆர்வி காருக்கும் எதிர்பார்த்த அளவு விற்பனை கிடைக்கவில்லை.

புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டு ஹோண்டா!

இந்த சூழலில்தான் புதிய எஸ்யூவி கார் இருப்பதன் அவசியத்தை ஹோண்டா கார் நிறுவனம் உணர்ந்து கொண்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அந்த நிறுவனம் முடிவு செய்து அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Crazy Cars Models At Auto Expo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X