TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
புது எர்டிகா வந்தாலும் பழைய எர்டிகாவும் விற்பனையில் இருக்கும்... ஆனால்... ?!
வடிவமைப்பிலும் வசதிகளும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இடவசதியிலும் சற்று மேம்பட்டு வரும் இந்த புதிய 7 சீட்டர் மாடல் பெரும் எதிர்பார்ப்பை கிளறி இருக்கிறது.
இந்த நிலையில், எர்டிகா கார் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, புதிய தலைமுறை எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டாலும், தற்போதுள்ள மாடலும் தொடர்ந்து விற்பனையில் வைக்க மாருதி திட்டமிட்டுள்ளது.
ஆனால், தற்போதுள்ள மாடலை டாக்சி மார்க்கெட்டிற்கு மட்டும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. புதிய மாருதி டிசையர் கார் வந்தபோது, பழைய மாடல் டாக்சி மார்க்கெட்டில் டிசையர் டூர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே யுக்தியுடன் தற்போதைய எர்டிகா மாடலை எர்டிகா டூர் என்ற பிராண்டில் டாக்சி மார்க்கெட்டிற்காக விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
புதிய மாருதி எர்டிகா காரில் 1.4 பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக 1.5 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் எஞ்சின் தக்க வைக்கப்படும்.
இந்த நிலையில், டாக்சி மார்க்கெட்டில் விற்பனைக்கு செல்ல இருக்கும் மாருதி எர்டிகா டூர் மாடலானது 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். தற்போதுள்ள மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 94 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.
டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பாதுகாப்பு தர விதிகளின்படி, மாருதி எர்டிகா டூர் காரில் இரண்டு ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றிருக்கும்.
கொடுக்கும் பணத்திற்கு அதிக மதிப்பு வாய்ந்த சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் 7 சீட்டர் மாடல் என்பதால் டாக்சி மார்க்கெட்டில் செல்ல இருக்கும் எர்டிகா டூர் மாடலுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஏசி சிஸ்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் ஒரே வேரியண்ட்டில் மட்டுமே மாருதி எர்டிகா டூர் கார் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. புதிய எர்டிகா சற்று பிரிமியம் மாடலாக தனிநபர் மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்படும். இந்த எர்டிகா டூர் மாடலின் விலை மிக குறைவாக நிர்ணயிக்கப்படும்.