புதிய டட்சன் க்ராஸ் பட்ஜெட் எஸ்யூவி அறிமுகம்... விஷயம் என்னன்னா இது ஒரு 7 சீட்டர்... !!

Written By:
Recommended Video - Watch Now!
Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark

டட்சன் பிராண்டில் இதுவரை வெளிவந்த மாடல்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாடல் புதிய டட்சன் க்ராஸ். இந்தோனேஷியாவில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மாடல் குறித்த முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டட்சன் க்ராஸ் பட்ஜெட் எஸ்யூவி அறிமுகம்!

2015ம் ஆண்டு டோக்கியோ மோட்டார் ஷோவிலும், தொடர்ந்து 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் டட்சன் கோ க்ராஸ் என்ற கான்செப்ட் எஸ்யூவி காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த கான்செப்ட் மாடல்தான் தற்போது தயாரிப்பு நிலை தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டட்சன் க்ராஸ் பட்ஜெட் எஸ்யூவி அறிமுகம்!

ரெனோ க்விட், டட்சன் ரெடிகோ கார்கள் உருவாக்கப்பட்ட ரெனோ- நிஸான் கூட்டணியின் CMF-A பிளாட்ஃபார்மின் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட CMF-A+ என்ற பிளாட்ஃபார்மில் புதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டட்சன் க்ராஸ் பட்ஜெட் எஸ்யூவி அறிமுகம்!

கான்செப்ட் நிலை காருக்கும், இப்போது தயாரிப்பு நிலை காருக்கும் சிறிய வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் டிசைன் எளிமையாகவும், எஸ்யூவி தாத்பரியங்களுடன் கவர்கிறது.

புதிய டட்சன் க்ராஸ் பட்ஜெட் எஸ்யூவி அறிமுகம்!

இந்த புதிய டட்சன் க்ராஸ் காரில் டட்சன் கார்களின் தனித்துவமான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், வட்ட வடிவிலான துணை ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், சாம்பல் வண்ண பாடி கிளாடிங் சட்டங்கள், மல்டி கலர் அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய டட்சன் க்ராஸ் பட்ஜெட் எஸ்யூவி அறிமுகம்!

டட்சன் க்ராஸ் மாடலானது எஸ்யூவி மற்றும் எம்பிவி ஆகிய ரகங்களின் கலவையான சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி பிரேக் தொழில்நுட்பம் ஆகிய நிரந்தர பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய டட்சன் க்ராஸ் பட்ஜெட் எஸ்யூவி அறிமுகம்!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஸ்கிட் பிளேட்டுகள், ரூஃப் ரெயில்கள், ரூஃப் ஸ்பாய்லர், எல்இடி ஸ்பாட் லைட் மற்றும் 15 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை இருக்கின்றன.

புதிய டட்சன் க்ராஸ் பட்ஜெட் எஸ்யூவி அறிமுகம்!

இந்த காரில் முற்றிலும் கருப்பு வண்ண இன்டீரீயர் இடம்பெற்று இருக்கின்றன. இந்த கார் 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் வருகிறது. டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டட்சன் க்ராஸ் பட்ஜெட் எஸ்யூவி அறிமுகம்!

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎஸ் பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் எதிர்பார்க்கலாம்.

புதிய டட்சன் க்ராஸ் பட்ஜெட் எஸ்யூவி அறிமுகம்!

புதிய டட்சன் க்ராஸ் கார் ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஹேட்ச்பேக் கார்களின் விலையில் ஓர் 7 சீட்டர் எஸ்யூவி மாடலாக இருக்கும்.

மேலும்... #டட்சன் #datsun
English summary
The much anticipated 7-seater crossover, the Datsun Cross was revealed in Indonesia.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark