புதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்!

Written By:

கடந்த 2016ம் ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் டட்சன் கோ க்ராஸ் என்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த எஸ்யூவி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்!

இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் தற்போது தயாரிப்பு நிலைக்கு உகந்த அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், வரும் 18ந் தேதி இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த புதிய எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக டட்சன் தெரிவித்துள்ளது.

Recommended Video - Watch Now!
Watch Now | Indian Navy's MiG-29K Crashed In Goa Airport | Full Details - DriveSpark
புதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்!

இந்த எஸ்யூவியின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் டட்சன் பிரியர்களின் ஆவலை அதிகரிக்கும் விதமாக, புதிய டீசர் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. கோ க்ராஸ் என்ற பெயரில் கான்செப்ட் மாடல் அழைக்கப்பட்ட நிலையில், தயாரிப்பு நிலை மாடலானது க்ராஸ் என்ற பெயரில் வர இருக்கிறது.

புதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்!

டீசரில் வெளியிடப்பட்டு இருக்கும் முகப்பு பகுதியானது, கான்செப்ட் மாடலுக்கும், தயாரிப்பு நிலை மாடலின் டிசைன் அம்சங்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் தெரியவில்லை. ஆனால், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் போன்றவை தயாரிப்பு நிலை மாடலின் முக்கிய அம்சங்கள்.

புதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்!

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டட்சன் கோ ப்ளஸ் காம்பேக்ட் எம்பிவி காரை எஸ்யூவி ரக மாடலாக கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சிறப்பம்சங்களை சேர்த்து மேம்படுத்தி இருக்கிறது டட்சன்.

Trending On Drivespark Tamil:

2014ல் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் புதியதாக வந்திருக்கும் விசேஷ கப்பல்..!!

கான்டினென்ட்டல் ஜிடி மோட்டார் சைக்கிளுக்கு விடைக்கொடுத்த ராயல் என்ஃபீல்டு..!!

புதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்!

அதிகரிக்கப்பட்ட க்ரவுண்ட் க்ளியரன்ஸ், பக்கவாட்டில் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்பாய்லர் மற்றும் டிசைன் மாற்றங்கள் எஸ்யூவி போன்ற முரட்டுத்தனத்தை இந்த காருக்கு வழங்கி இருக்கிறது.

புதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்!

பிற டட்சன் கார்கள் போன்ற இன்டீரியர் அமைப்பு இடம்பெற்றிருக்கும். அதேநேரத்தில், டேஷ்போர்டில் சிறிய மாற்றங்கள் இருக்கும். தொடுதிரை கட்டுப்பாட்டு வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

புதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்!

டட்சன் கோ ப்ளஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 104என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

புதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்!

இந்தோனேஷியாவில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடலை எதிர்பார்க்கலாம். அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதும் தகவல்.

Trending On Drivespark Tamil:

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தடை : காவல்துறை அதிரடி..!!

கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

புதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்!

டட்சன் கோ ப்ளஸ் காரின் எஸ்யூவி மாடலாக மேம்படுத்தப்பட்டு இருப்பதால், எஸ்யூவி மார்க்கெட்டில் பட்ஜெட் விலை மாடலாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த கார் ரூ.5 லட்சம் விலையில் எதிர்பார்க்கலாம். மாருதி செலிரியோ எக்ஸ், மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

புதிய டட்சன் க்ராஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு.... விரைவில் அறிமுகம்!

அடுத்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமெபைல் கண்காட்சியில், இந்த புதிய மாடல் காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது கணிப்பு தகவலாக உள்ளது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun has released a new teaser image which reveals the front fascia of all new cross. Read in Tamil.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark