டட்சன் கோ காரில் சிவிடி கியர்பாக்ஸ் வசதி அறிமுகமாகிறது!

மேம்படுத்தப்பட்ட டட்சன் கோ கார் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, புதிய ஹெட்லைட் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பம்பர் அமைப

By Saravana Rajan

மேம்படுத்தப்பட்ட டட்சன் கோ கார் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த காரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் கியர்பாக்ஸ் வசதி குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன..

டட்சன் கோ காரில் சிவிடி கியர்பாக்ஸ் வசதி அறிமுகமாகிறது!

தோற்றத்திலும், வசதிகளிலும் டட்சன் கோ கார் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கோ கார் இந்தோனேஷியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.

டட்சன் கோ காரில் சிவிடி கியர்பாக்ஸ் வசதி அறிமுகமாகிறது!

புதிய க்ரில் அமைப்பு, புதிய ஹெட்லைட் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பம்பர் அமைப்புகளுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரியர் வியூ கண்ணாடிகளின் பின்புறத்தில் இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டட்சன் கோ காரில் சிவிடி கியர்பாக்ஸ் வசதி அறிமுகமாகிறது!

சோதனை ஓட்டம் நடத்தப்படும் மாடலில் விசேஷ பாடி கிட் பொருத்தப்பட்டு இருப்பதும் தெரிகிறது. பெரிய ஸ்பாய்லர், முன்புறத்தில் ஸ்பிளிட்டர்கள், பக்கவாட்டில் சைடு ஸ்கர்ட்டுகள் மற்றும் பின்புறத்தில் ரியர் டிஃபியூசர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

டட்சன் கோ காரில் சிவிடி கியர்பாக்ஸ் வசதி அறிமுகமாகிறது!

உட்புறத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள் தெரிகின்றன. புதிய ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளன. ஏசி வென்ட்டுகள் டிசைனிலும் மாற்றங்கள் இருக்கின்றன. டட்சன் கோ க்ராஸ் காரிலிருக்கும் சில டிசைன் தாத்பரியங்களுடன் இந்த கார் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

டட்சன் கோ காரில் சிவிடி கியர்பாக்ஸ் வசதி அறிமுகமாகிறது!

2018 மாடலாக வரும் புதிய டட்சன் கோ காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் தக்க வைக்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து இப்போது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வர இருப்பது தெரிய வந்துள்ளது.

டட்சன் கோ காரில் சிவிடி கியர்பாக்ஸ் வசதி அறிமுகமாகிறது!

வரும் 7ந் தேதி இந்தோனேஷியாவில் புதிய டட்சன் கோ கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் இந்தியாவிலும் இந்த புதிய டட்சன் கோ கார் மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பாப்ர்க்கப்படுகிறது. இந்தியாவில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் சந்தேகத்திற்கு இடமான விஷயம்தான். மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வருவதற்கான சாத்தியம் உள்ளது.

டட்சன் கோ காரில் சிவிடி கியர்பாக்ஸ் வசதி அறிமுகமாகிறது!

புதிய டட்சன் கோ க்ராஸ் கார் மாருதி ஆல்ட்டோ, ரெனோ க்விட் உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும். தற்போதைய மாடல் ரூ.3.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடல் சற்றே கூடுதல் விலையில் வரும் என்று தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #டட்சன் #datsun
English summary
The 2018 Datsun GO facelift has been spotted testing in Indonesia. The Datsun GO test mule can be seen with a CVT badge, indicating the facelift of the hatchback to get an automatic transmission.
Story first published: Saturday, May 5, 2018, 12:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X