TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
புதிய டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் இந்திய வருகை விபரம்!!
புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் இந்திய வருகை விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் கடந்த மாதம் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. அங்கு கூடுதலாக விசேஷ பாடி கிட் கொண்டதாக இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில், இந்த கார்கள் விரைவில் இந்தியாவிலும் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், புதுப்பொலிவு பெற்ற டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் புதிய ஹெட்லைட் டிசைன், பகல்நேர எல்இடி விளக்குகள், புதுப்பொலிவுடன் கூடிய முகப்பு க்ரில் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. 14 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் புத்தம் புதிய டேஷ்போர்டு அமைப்பு இடம்பெற இருக்கிறது. புதிய ஏசி வென்ட் அமைப்பு மற்றும் 6.75 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வர இருக்கிறது.
புதிய மாடலில் அனலாக் டாக்கோமீட்டருடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. தனித்தனி இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், மூடியுடன் கூடிய க்ளவ் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இரண்டு கார்களிலும டேஷ்போர்டுடன் இணைந்த வகையிலான கியர் லிவர் இடம்பெற்றுள்ளது.
டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பவர் விண்டோ, ரியர் வைப்பர், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்குகள் நிரந்தர அம்சங்களாக இடம்பெற இருக்கின்றன.
இந்த இரண்டு கார்களிலும் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 68 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்தோனேஷிய மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வருகிறது.
டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் தற்போதுள்ள மாடல்களை விட ரூ.25,000 முதல் ரூ.30,000 வரையிலான கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. சற்றே பிரிமியம் வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த மாடல்களை களமிறக்க உள்ள டட்சன் நிறுவனம்.
Source: Autocar India