டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

Written By:

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

டட்சன் கோ ரீமிக்ஸ் மற்றும் கோ ப்ளஸ் ரீமிக்ஸ் என்ற பெயரில் இந்த புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த கார்களில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு வசீகரிக்கின்றன.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

டட்சன் கோ காரின் ரீமிக்ஸ் எடிசன் மாடல் விசேஷமான கருப்பு வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனுடன் கவர்ச்சிகரமான ஆரஞ்ச் வண்ண பாடி டீக்கெல் எனப்படும் விசேஷ ஸ்டிக்கர் அலங்காரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

டட்சன் கோ ப்ளஸ் ரீமிக்ஸ் எடிசன் மாடல் ஸ்டார்ம் ஒயிட் மற்றும் கருப்பு ஆகிய இரட்டை வண்ணக் கலவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரிலும் ஆரஞ்ச் வண்ண அலங்காரம் வசீகரிக்கிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த இரண்டு கார்களும் கருப்பு வண்ண இன்டீரியர் மற்றும் ஆரஞ்ச் வண்ண அலங்காரத்துடன் ஜொலிக்கிறது. இந்த கார்கள் 9 கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ரிமோட் கீலெஸ் என்ட்ரி வசதி, புளூடூத் வசதியுடன் ஆடியோ சிஸ்டம், கவர்ச்சிகரமான சீட் கவர்கள், முற்றிலும் கருப்பு வண்ண முன்பக்க க்ரில் அமைப்பு, கருப்பு வண்ண வீல் கவர்கள், பியானோ பிளாக் என்ற பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ண இன்டீரியர், ரியர் ஸ்பாய்லர், க்ரோம் பூச்சுடன் புகைப்போக்கி மற்றும் பம்பர் அலங்காரத்துடன் வந்துள்ளது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த இரண்டு கார்களிலுமே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் 5 பேர் செல்வதற்கான இடவசதியையும், டட்சன் கோ ப்ளஸ் கார் 7 பேர் செல்வதற்கான இடவசதியையும் பெற்றிருக்கின்றன. இதில், டட்சன் கோ ப்ளஸ் காரின் மூன்றாவது வரிசை இருக்கையில் சிறியவர்கள் மட்டுமே பயணிக்க முடியும்.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த இரண்டு கார்களிலும் ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், ஸ்பீடு சென்சிடிவ் எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், ஏசி, முன்புற கதவுகளுக்கான பவர் விண்டோஸ், யுஎஸ்பி சார்ஜ் பாயிண்ட் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் வசதிகள் இருக்கின்றன.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

டட்சன் கோ ரீமிக்ஸ் எடிசன் மாடல் ரூ.4.21 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டட்சன் கோ ப்ளஸ் ரீமிக்ஸ் எடிசன் மாடல் ரூ.4.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun GO and GO+ Remix Limited Edition Launched in India. The new Remix Limited Edition of the Datsun GO and GO+ is priced at Rs 4.21 lakh and 4.99 lakh respectively. Both prices are ex-showroom (India).
Story first published: Monday, March 12, 2018, 15:11 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark