ரெடி-கோ ஹேட்ச்பேக் காரில் புதிய டைமன்டு எடிசனை வெளியிடும் டட்சன் நிறுவனம்; காரணம் இதுதான்..!!

Written By:

டட்சன் நிறுவனத்தின் சிறப்பான விற்பனையை பெற்று வரும் ரெடி-கோ காரில் 'டைமன்டு' என்ற பெயரில் புத்தம் புதிய எடிசன் அறிமுகமாகவுள்ளது.

டட்சன் ரெடி-கோ காரில் புதிய டைமன்டு எடிசன் விரைவில் அறிமுகம்

இந்தியாவில் விற்பனையாகி வரும் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கார்களில் டட்சன் ரெடி-கோ கார் முன்னணியில் உள்ளது.

சமீபத்தில் கூட டட்சன் நிறுவனம் ரெடி-கோ மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகமானது.

டட்சன் ரெடி-கோ காரில் புதிய டைமன்டு எடிசன் விரைவில் அறிமுகம்

தற்போது கார்வாலே இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரெடி-கோ காரில் விரைவில் டைமன்டு என்ற பதிப்பை டட்சன் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டட்சன் ரெடி-கோ காரில் புதிய டைமன்டு எடிசன் விரைவில் அறிமுகம்

இதற்கு முன்னதாக இந்தியாவில் ரெடி-கோ காரின் விற்பனை ஏறுமுகமாக உருவான சமயத்தில், அதில் கோல்டு என்ற பதிப்பை டட்சன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

டட்சன் ரெடி-கோ காரில் புதிய டைமன்டு எடிசன் விரைவில் அறிமுகம்

அதன்படி புதிய நிற தேர்வுகள், பானட் டீகேல்ஸ், கதவு, மேற்கூரை மற்றும் டெயில்கேட் என ரெடிகோ டைமன்டு பதிப்பில் தோற்றப்பொலிவுகள் புதுமையாக இருக்கும்.

டட்சன் ரெடி-கோ காரில் புதிய டைமன்டு எடிசன் விரைவில் அறிமுகம்

டீலர்களிடம் உள்ள 2017 ரெடிகோ காரின் எண்ணிக்கையை குறைக்கவே டட்சன் அதில் புதிய பதிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இந்தியாவில் இந்த ஹேட்ச்பேக் காரின் விற்பனையை அதிகரிக்கவும் இந்த டைமன்டு எடிசன் பலன் தரும் என்று டட்சன் திட்டமிட்டுள்ளது.

டட்சன் ரெடி-கோ காரில் புதிய டைமன்டு எடிசன் விரைவில் அறிமுகம்

ரெடிகோ காரின் 800சிசி மற்றும் 1 லிட்டர் என இரண்டு வேரியன்டுகளிலும் டைமன்டு எடிசன் மாடல் வெளிவரவுள்ளது.

800சிசி திறன் கொண்ட டட்சன் ரெடி-கோ காரில் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 54 பிஎச்பி பவர் மற்றும் 72 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

டட்சன் ரெடி-கோ காரில் புதிய டைமன்டு எடிசன் விரைவில் அறிமுகம்

தொடர்ந்து 1 லிட்டர் கொண்ட வேரியன்டில் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 67 பிஎச்பி பவர் மற்றும் 91 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இந்த இரண்டு எஞ்சின்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. ரெடி-கோ 1 லிட்டர் வேரியன்ட் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

டட்சன் ரெடி-கோ காரில் புதிய டைமன்டு எடிசன் விரைவில் அறிமுகம்

சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃப்பார்மில் தயாராகியுள்ள டட்சன் ரெடி-கோ கார் இந்தியாவில் வெளியான நாளிலிருந்தே சிறந்த விற்பனை திறனை பெற்று வருகிறது.

இருந்தாலும் நம் நாட்டின் மொத்த ஹேட்ச்பேக் கார் விற்பனையோடு ரெடிகோ காரை ஒப்பிட்டு பார்க்கும் போது ரெனால்ட் க்விட் மாடல் தான் முன்னிலை வகிக்கிறது.

டட்சன் ரெடி-கோ காரில் புதிய டைமன்டு எடிசன் விரைவில் அறிமுகம்

ரூ. 2.49 லட்சம் ஆரம்ப விலையில் தொடங்கும் டட்சன் ரெடி-கோ காரின் டாப் ஸ்பெக் வேரியன்டின் விலை ரூ. 3.96 லட்சமாகும். இந்த விலை இரண்டுமே டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

டட்சன் ரெடி-கோ காரில் புதிய டைமன்டு எடிசன் விரைவில் அறிமுகம்

இந்தியாவின் ஷோரூம்களில் விற்பனையாகாமல் இருக்கும் ரெடிகோ காரின் எண்ணிக்கையை குறைக்கவே டட்சன் நிறுவனம் அதில் புதிய டைமன்டு பதிப்பை வெளியிடவுள்ளது.

டட்சன் ரெடி-கோ காரில் புதிய டைமன்டு எடிசன் விரைவில் அறிமுகம்

இது காருக்கான தோற்றப்பொலிவை மட்டும் அதிகரிக்காமல், அதற்கான விற்பனையையும் அதிகரிக்கும் என்பது டட்சன் நிறுவத்தின் எதிர்பார்ப்பு.

டட்சன் ரெடி-கோ காரில் புதிய டைமன்டு எடிசன் விரைவில் அறிமுகம்

புதிய கட்டமைப்பு மற்றும் புதிய பெயர் ஆகியவற்றோரு மட்டுமில்லாமல், ரெடிகோ டைமன்டு எடிசன் மாடலின் விலையிலும் சலுகை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #டட்சன் #datsun
English summary
Read in Tamil: Datsun redi-GO Diamond Edition To Be Launched In India. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark