டாடா நெக்ஸானுக்கு போட்டியாக வரும் டட்சன் எஸயூவி கார்!!

ரூ.10 லட்சத்திற்குள் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருப்பதாக டட்சன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்படும் இந்த புதிய எஸ்யூவியில் 1.0 லிட்டர்

By Saravana Rajan

ரூ.10 லட்சத்திற்குள் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருப்பதாக டட்சன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா ஆகிய மாடல்களுக்கு போட்டியாக வர இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா நெக்ஸானுக்கு போட்டியாக வரும் டட்சன் எஸயூவி கார்!!

இந்த புதிய எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. டட்சன் ரெடிகோ, ரெனோ க்விட் கார்களில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் எஞ்சினில் மாற்றங்களை செய்து டர்போசார்ஜர் துணையுடன் அதிக செயல்திறனுடன் இந்த எஞ்சின் வருகிறது.

டாடா நெக்ஸானுக்கு போட்டியாக வரும் டட்சன் எஸயூவி கார்!!

பிற டட்சன் பட்ஜெட் கார்களை போன்றே, இந்த எஸ்யூவியிலும் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்காது. இதுதவிர்த்து, புதிய எம்பிவி கார் மாடலையும் டட்சன் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காரிலும் புதிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட இருக்கிறது.

டாடா நெக்ஸானுக்கு போட்டியாக வரும் டட்சன் எஸயூவி கார்!!

இந்த காரிலும் டீசல் மாடல் இருக்காது என்றே தெரிகிறது. ஏனெனில், டீசல் எஞ்சின் ஆப்ஷன் வழங்கும்போது அது 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டை தாண்டு. அவ்வாறு ரூ.10 லட்சத்திற்கு மேல் செல்லும் மாடல்களை நிஸான் பிராண்டில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற கொள்கை முடிவுடன் நிஸான் கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

டாடா நெக்ஸானுக்கு போட்டியாக வரும் டட்சன் எஸயூவி கார்!!

இதனிடையே, பண்டிகை காலத்தையொட்டி, வரும் செப்டம்பரில் டட்சன் ரெடிகோ காரின் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட டட்சன் முடிவு செய்திருக்கிறது. அதேபோன்று, புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

டாடா நெக்ஸானுக்கு போட்டியாக வரும் டட்சன் எஸயூவி கார்!!

இதுகுறித்து கருத்து தெரிவித்த நிஸான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் தாமஸ் குயேஹி, " டட்சன் பிராண்டில் வலுவான மாடல்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். ஆனால், வரும் காலங்களில் டட்சன் பிராண்டில் மிக வலுவான மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

டாடா நெக்ஸானுக்கு போட்டியாக வரும் டட்சன் எஸயூவி கார்!!

காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். வரும் பண்டிகை காலம் முதல் ஒவ்வொரு ஆறு மாத இடைவெளியில் முத்தாய்ப்பான கார் மாடல்களை டட்சன் பிராண்டில் களமிறக்குவோம். ," என்று கூறி இருக்கிறார்.

டாடா நெக்ஸானுக்கு போட்டியாக வரும் டட்சன் எஸயூவி கார்!!

புதிய டட்சன் எம்பிவி கார் 7 சீட்டர் மாடலாக இருக்கும். அதேநேரத்தில், டட்சன் கோ ப்ளஸ் காருக்கு மேலான விலையிலும், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டட்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Source: ACI

Most Read Articles
மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun to launch sub-4 meter compact SUV In India Soon.
Story first published: Tuesday, July 24, 2018, 18:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X