டிசி டிசிஏ ஸ்போர்ட்ஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

Written By:

டிசி டிசைன் நிறுவனத்தின் புதிய டிசிஏ ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் நடந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா விற்பனைக்கு அறிமுகம் செய்தார்.

புதிய டிசி டிசிஏ ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிசி டிசைன் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் அவந்தி என்ற பெயரிலான இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

புதிய டிசி டிசிஏ ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் அடுத்து ஒரு புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடலை டிசி டிசைன் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிய டிசி டிசிஏ ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

டிசி டிசிஏ என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய கார் லாஃபெராரி மற்றும் பகானி ஸோண்டா போன்ற உலகின் மிக பிரபலமான சூப்பர் கார்களின் டிசைன் தாத்பரியங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டிசி டிசிஏ ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

டிசி அவந்தி காரைவிட இந்த காரின் டிசைன் மிக நேர்த்தியாக வந்துள்ளது. குறிப்பாக, அவந்தி காரின் பின்புறத்தில் இருந்த சில ஒழுங்கற்ற டிசைன் விஷயங்கள், இந்த புதிய டிசி டிசிஏ காரில் மிக நேர்த்தியாக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் தோற்றத்தில் மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக வந்துள்ளது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய டிசி டிசிஏ ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

டைட்டானியம், கார்பன் மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் ஆங்கில முதல் எழுத்துக்களை எடுத்து டிசிஏ என்ற பெயரை வைத்துள்ளது டிசி டிசைன் நிறுவனம். இந்த காரில் சில கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய டிசி டிசிஏ ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் மிக முக்கிய அம்சம், 3.8 லிட்டர் வி6 எஞ்சினுடன் வந்துள்ளதே. இந்த வி6 எஞ்சின் அதிகபட்சமாக 300 பிஎச்பி பவரை வழங்க வல்லது. இந்த காரில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டிசி டிசிஏ ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டிசி டிசைன் டிசிஏ கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டதாக தெரியவந்துள்ளது. நிச்சயமாக அதிசெயல்திறன் மிக்க கார் மாடலாகவே டிசி உருவாக்கி இருக்கிறது.

புதிய டிசி டிசிஏ ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் ரூ.65 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களை கவரும் வகையில், ரூ.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய டிசி டிசிஏ ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

மொத்தமாக 299 கார்கள் மட்டுமே லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்படும் என்று டிசி டிசைன் நிறுவனத்தின் தலைவர் திலீப் சாப்ரியா தெரிவித்துள்ளார்.

புதிய டிசி டிசிஏ ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட டிசி நிறுவனத்தின் மிக அதிவேகமான கார் மாடல் என்ற பெருமையுடன் குறிப்பிடப்படும் இந்த கார் விற்பனையிலும் சாதிக்கும் என்று நம்பலாம்.

English summary
DC Design TCA Sports Car Launched At 2018 Auto Expo.
Story first published: Friday, February 9, 2018, 13:46 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark