TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
சுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை? ; மத்திய அரசு ஆலோசனை
இந்தியாவில் எலெக்டரிக் வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் குறைந்த கட்டணம் வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்ற பல்வேறு சலுகைகளை வழங்க தான் மற்ற வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களை வித்தியாசப்படுத்த பச்சை நிற நம்பர் பிளேட் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பயன்பாட்டை அதிகரிக்க அரசு திவிரமான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. இதற்காக ஃபேம் என்ற அமைப்பை உருவாக்கி மாற்றி எரிபொருளில் இயங்கும் வாகனங்களை அதிகமாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது.
இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியங்கள் வழங்கிவருகிறது. மேலும் எலெக்டரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்காக கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதையடுத்து அரசு எலெக்டரிக் வாகனங்களையும் பதிவு செய்யும் திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது. அதன் படி மற்ற வாகனங்களை பதிவு செய்வது போல எலெக்டரிக் வாகனங்களை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
பதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவு எண் வழங்கப்படும் அந்த எண்ணை பச்சை நிற நம்பர் பிளேட்டில் பதிவு செய்து வாகனத்தில் பொருத்த வேண்டும். அதில் எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டு கேப் சர்வீஸ், கமர்ஷியல் பயன்பாடு, ஆகியவற்றிக்கு பயன்படுத்தப்படும்
வாகனங்கள் பச்சை நிற போர்டில் மஞ்சள் நிறத்தில் எழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் பச்சை நிற போர்டில் வெள்ளை நிறத்தில் எண் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என அரசு விதிமுறைகளை வகுதத்தது.
இதற்கான அறிவிப்பு கடந்த மே மாதமே வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் உள்ள ஆட்சேபனைகள் குறித்து கேட்கபட்டது. இந்நிலையில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மே மாதம் அறிவிப்பு வெளியானவுடனே எலெக்ட்ரிக் வாகன விற்பனையாளர்கள் இதை நடைமுறைப்படுத்த துவங்கினர் அவர்களே விற்பனையாகும் வாகனங்களுக்கான பதிவை பெற்று தர துவங்கினர்.
இந்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் வேறு விதமான கலர் நம்பர் பிளேட்டை பொருத்துவதற்கான விளக்கத்தை அரசு தற்போது அளித்துள்ளது. வரும் காலத்தில் பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கே முன்னுரிமை வழங்க அரசு ஆலோசனை நடத்திவருகிறது. அதன்படி பார்க்கிங் பகுதியில் எலெக்ட்ரிக் கார்களுக்கே முன்னுரிமை வழங்கவும், முடிவு செய்துள்ளது.
அது மட்டும் அல்லாமல் இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் எலெக்ட்ரிக் கார்களுக்கு சலுகை வழங்கவும், சில இடங்களில் இலவச அனுமதி வழங்கவும் மத்திய போக்குவரத்து அமைச்சகம் பரிசிலித்து வருகிறது.
இவ்வாறான சலுகைகள் வழங்க எலெக்ட்ரிக் வாகனங்களை சரியாக அடையாளம் காணவே இந்த வேறுபட்ட நம்பர் பிளேட்களை வழங்கியுள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.