இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு மின்சார பேருந்து தயாரித்து வெற்றிக்கண்ட ஐஷர் நிறுவனம்..!!

Written By:

கமர்ஷியல் வாகனங்களை தயாரிக்கும் ஐஷர் டிரக் மற்றும் பஸ்ஸஸ் நிறுவனம் தனது ஸ்கைலைன் ப்ரோ என்ற புதிய மின்சார பேருந்தை இந்தியாவில் முதன்முறையாக  அறிமுகம் செய்துள்ளது.

ஐஷர் நிறுவனத்தின் முதல் மின்சார பேருந்து அறிமுகம்..!!

கேபிஐடி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் ஸ்கைலைன் ப்ரோ என்ற பிளாட்ஃபாரமின் கீழ் இந்த பேருந்திற்கான கட்டமைப்புகளை மேற்கொண்டுள்ளது.

ஐஷர் நிறுவனத்தின் முதல் மின்சார பேருந்து அறிமுகம்..!!

புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்துகள், ரெவலோ மின்மயமாக்கல் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கின்றன. தனியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தை நாம் கார்கள், பேருந்துகள் என அனைத்து வித வாகனங்களிலும் பயன்படுத்தலாம்.

ஐஷர் நிறுவனத்தின் முதல் மின்சார பேருந்து அறிமுகம்..!!

இந்த பேருந்திற்கான செயல்திறனில் மின்சார மோட்டார், மின்சார மோட்டார் கட்டுபாடு, பேட்டரி பேக் மற்றும் பேட்டரியை மேலாண்மை செய்யும் அமைப்பு ஆகியவை உள்ளன.

ஐஷர் நிறுவனத்தின் முதல் மின்சார பேருந்து அறிமுகம்..!!

ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து பயன்படுத்திய மின் ஆற்றலில் 36 சதவீத ஆற்றலை தானாகவே உருவாக்கும் திறன் பெற்றது. அதேபோல ஒரு கி.மீ 0.8 யூனிட்டுக்கும் குறைவான மின் நுகர்வு தான் இதற்கு தேவைப்படுகிறது.

ஐஷர் நிறுவனத்தின் முதல் மின்சார பேருந்து அறிமுகம்..!!

ஒரு முறை சார்ஜ் செய்தால் 177 கி.மீ வரை இந்த பேருந்து செல்லும். ஸ்கைலைன் ப்ரோ பேருந்தை வெளியிட்டுள்ளதன் மூலம் இந்தியாவின் மின்சார ஆற்றல் வாகன துறையில் புதியதாக இணைந்துள்ளது ஐஷர்.

ஐஷர் நிறுவனத்தின் முதல் மின்சார பேருந்து அறிமுகம்..!!

9 மீட்டர் அளவு கொண்ட இந்த பேருந்தில் முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் டாப்-அப் சார்ஜர் அம்சமும் இடம்பெற்றுள்ளது.

மற்றொரு அம்சமாக ஸ்கைலைன் ப்ரோ பேருந்தில் உள்ள ரெவலோ தொழில்நுட்பம் இதற்கு குறைந்த மின்சார தேவையிலும் சிறப்பாக இயங்கும் வல்லமையை தருகிறது.

ஐஷர் நிறுவனத்தின் முதல் மின்சார பேருந்து அறிமுகம்..!!

முக்கிய பாதுகாப்பு தரங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்துகள் இந்திய சாலைகளில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு சான்றிக்கப்பட்டிருக்கின்றன.

ஐஷர் நிறுவனத்தின் முதல் மின்சார பேருந்து அறிமுகம்..!!

மேலும் இதில் நடத்தப்பட்ட ஆணி ஊடுருவல் சோதனையிலும் ஸ்கைலைன் பேருந்து சிறப்பான முடிவுகளை வழங்கியிருக்கிறது. ஐஷர் நிறுவனத்தின் ஆலை மத்திய பிரதேசத்தின் இந்தோரில் இயங்கி வருகிறது. அங்கு தான் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

ஐஷர் நிறுவனத்தின் முதல் மின்சார பேருந்து அறிமுகம்..!!

நிகழ்ச்சியில் பேசிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பேசிய வினோத் அகர்வால்,

"முற்றிலும் இந்தியாவிலேயே தயாரான இந்த மின்சார பேருந்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதை உருவாக்கும் பணியில் முக்கிய அங்கமாக இருந்த கேபிஐடி டெக்னாலிஜிஸ் நிறுவனத்திற்கு நன்றி" என்று அவர் தெரிவித்தார்.

ஐஷர் நிறுவனத்தின் முதல் மின்சார பேருந்து அறிமுகம்..!!

மேலும் ஸ்கைலைன் ப்ரோ இ பேருந்து சாலை பயன்பாட்டிற்கான அனுமதி சான்றிதழையும் பெற்றுள்ளது. இது நிச்சயம் பயணிகளுக்கு சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும் என்று வினோத் அகர்வால் கூறினார்.

2030ம் ஆண்டிற்குள் இந்தியாவின் வாகன பயன்பாட்டை முற்றிலுமாக மின்சார ஆற்றலுக்கு மாற்ற மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.

ஐஷர் நிறுவனத்தின் முதல் மின்சார பேருந்து அறிமுகம்..!!

அதில் கனரக வாகன பயன்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் இந்த புதிய ஸ்கைலைன் ப்ரோ இ மின்சார பேருந்து அறிமுகமாகியுள்ளது.

தனிநபர் வாகன தேவைகளை விட பொது போக்குவரத்திற்கான வாகனங்களை மின்சார ஆற்றலுக்கு மாற்றுவது மிக அவசியம்.

ஐஷர் நிறுவனத்தின் முதல் மின்சார பேருந்து அறிமுகம்..!!

இதன் மூலம், மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் மத்திய அரசின் 2030ம் ஆண்டிற்குள் வாகன துறையை மின்சார ஆற்றலுக்கு மாற்றும் திட்டத்தை எளிதாக சாத்தியமடையும்.

மேலும்... #ஐஷர் #eicher
English summary
Read in Tamil: Eicher Introduces Skyline Pro Electric Bus In India. Click for Details...
Story first published: Tuesday, February 6, 2018, 17:35 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark