அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

By Arun

இந்திய அரசியல்வாதிகள் பலர் மஹிந்திரா ஸ்கார்பியோ, டொயோட்டா பார்ச்சூனர் போன்ற கார்களை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் ஒரு சில அரசியல்வாதிகள், லம்போர்கினி, ஃபெராரி போன்ற சூப்பர் கார்களை கூட சொந்தமாக வைத்துள்ளனர். அப்படி விலை உயர்ந்த கார்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

பிரதீக் யாதவ்

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ். அதாவது உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் தம்பி. முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் சக்தி வாய்ந்த எஸ்யூவி கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

ஆனால் பிரதீக் யாதவ், மிகவும் விலை உயர்ந்த லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் காரை பயன்படுத்தி வருகிறார். இந்த இத்தாலியன் சூப்பர் காரில் 5.2 லிட்டர், வி10 (V10) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 610 பிஎச்பி பவர் மற்றும் 560 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சீறிப்பாய வல்லது.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் பற்றிய அறிமுகமே தேவையில்லை. திமுக தலைவரும், இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான கருணாநிதியின் பேரன். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன். பிறப்பால் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் உதயநிதி ஸ்டாலின்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

திமுக முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ''எனது குழந்தை பருவத்தில் இருந்தே அரசியலில் இருக்கிறேன். எனது தாத்தா மற்றும் தந்தையுடன் இணைந்து அரசியல் பிரசாரங்களில் பங்கேற்றிருக்கிறேன்'' என உதயநிதி ஸ்டாலின் தனது பேட்டிகளில் கூறியுள்ளார்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

ஹம்மர் எச்3 காரை, உதயநிதி ஸ்டாலின் சொந்தமாக வைத்துள்ளார். இந்த அமெரிக்கன் எஸ்யூவி வகை காரில், 3.5 லிட்டர் ஸ்ட்ரெயிட் (straight) 5 சிலிண்டர் எல்52 (L52) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 220 பிஎச்பி பவர் மற்றும் 305 என்எம் டார்க் திறனை வழங்கும் சக்தி வாய்ந்தது.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் (Y. S. Rajasekhara Reddy) மகன் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (YSR Congress) கட்சியின் தலைவராக உள்ளார்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

ஜாகுவார் எக்ஸ்ஜே எல் (Jaguar XJ L) காரை, ஜெகன் மோகன் ரெட்டி பயன்படுத்தி வருகிறார். 3.0 லிட்டர் டீசல், 5.0 லிட்டர் பெட்ரோல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஜாகுவார் எக்ஸ்ஜே எல் கார் விற்பனைக்கு வருகிறது.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

சிரஞ்சீவி

ஆந்திர மாநிலத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. இதுதவிர தயாரிப்பாளர், தொழிலதிபர், அரசியல்வாதி என சிரஞ்சீவிக்கு பல்வேறு முகங்கள் உண்டு. ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் காரை, சிரஞ்சீவி வைத்துள்ளார்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை உயர்ந்த லக்ஸரி கார்களில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம். லேட்டஸ்ட் ஜென்ரேஷன் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் காரின் விலை ரூ.9.5 கோடிக்கும் மேல். இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 6.75 லிட்டர் வி12 (V12) இன்ஜின், 453 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடியது.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

பவன் கல்யாண்

நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் தம்பிதான் பவன் கல்யாண். அண்ணனை போலவே நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர் பவன் கல்யாண். ஜன சேனா கட்சியின் நிறுவனரான பவன் கல்யாண், மெர்சிடிஸ் ஜி55 ஏஎம்ஜி (Mercedes G55 AMG) கார் வைத்துள்ளார்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

ராம் கடாம்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆளும்கட்சியான பாஜக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ராம் கடாம். மெர்சிடிஸ் இ350 கேப்ரியோலட் (Mercedes E350 Cabriolet) காரை, ராம் கடாம் வைத்துள்ளார். அதை விட அவரிடம் உள்ள முக்கியமான கார்களில் ஒன்று ஜாகுவார் எக்ஸ்ஜே எல் (Jaguar XJ L) லக்ஸரி செடான்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

ராஜிவ் சந்திரசேகர்

குஜராத் மாநிலத்தில் பிறந்தவரான ராஜிவ் சந்திரசேகர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். மிகவும் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் என்ற அடையாளமும் இவருக்கு உண்டு. இவர் தற்போது ராஜ்யசபா உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்

விலை உயர்ந்த கார்கள் பலவற்றை, ராஜிவ் சந்திரசேகர் சொந்தமாக வைத்துள்ளார். இதில், ஃபெராரி டினோ, ஃபெராரி எப்355 ஸ்பைடர், லம்போர்கினி முர்சிலகோ பர்சீட்டா, பிஎம்டபிள்யூ எம்5 (இ60), ஹம்மர் எச்2 ஆகியவை குறிப்பிடத்தகுந்த கார்கள் ஆகும்.

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Famous Indian Politicians Who Owns Expensive Cars. Read in Tamil
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more