ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

Written By:

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் பற்றிய விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இதுவரை விற்பனையில் இருந்த ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா கார் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் புத்தம் புதிய வி12 எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது.

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா காரைவிட இந்த புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் மிகவும் வசீகரமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. நீளமான பானட், குட்டையான பின்பகுதி, பூட்ரூமில் இணைக்கப்பட்ட ஸ்பாய்லர் அமைப்பு, வலிமையான சக்கரங்கள், நான்கு புகைப்போக்கி குழல்கள் இந்த காருக்கு அதிக வசீகரத்தையும், பிற மாடல்களிலிருந்து வேறுபடுத்துவதாகவும் இருக்கிறது.

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இந்த காரில் மிக நேர்த்தியான ஹெட்லைட்டு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சினை குளிர்விப்பதற்காக பானட்டில் செவுள் போன்ற அமைப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஃபெராரியின் முத்தாய்ப்பான க்ரில் அமைப்பும் குறிப்பிட்டத்தக்கது.

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் காரில் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. டர்போசார்ஜர் துணை இல்லாமல் இயங்கும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 789 பிஎச்பி பவரையும், 718 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 340 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா காரைவிட நவீன தொழில்நுட்ப அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது.

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இந்த காரில் சைடு ஸ்லிப் கன்ட்ரோல் என்ற தொழில்நுட்ப வசதி மூலமாக வளைவுகளில் திரும்பும்போது கார் அதிக கட்டுப்பாட்டுடன் செல்ல துணைபுரியும். இந்த கார் ரியர் வீல் ஸ்டீயரிங் சிஸ்டமும் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இந்த கார் ஃபெராரிகளுக்கு உரித்தான சிவப்பு வண்ணம் தவிர்த்து, நீலம் மற்றும் சில்வர் வண்ணங்களிலும்கிடைக்கும். அஸ்டன் மார்ட்டின் டிபி11, பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி மற்றும் லம்போர்கினி அவென்டேடார் எஸ் கார்களுக்கு போட்டியான ரகத்தில் வந்துள்ளது.

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் ரூ.5.20 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இப்போதைக்கு அதிக விலை கொண்ட ஃபெராரி மாடல் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
Ferrari 812 Superfast Launched In India. The newly launched Ferrari 812 Superfast is priced at Rs 5.20 crore ex-showroom. The Ferrari 812 Superfast replaces the F12 Berlinetta which was a popular car in the country. The supercar features an all-new naturally aspirated V12 engine.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark