புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விரைவில் அறிமுகம்!!

இந்தியாவின் சிறந்த ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களில் ஒன்று ஃபோர்ஸ் குர்கா. இந்த நிலையில், ஆஃப்ரோடு பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அதிக சக்திவாய்ந்த புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி வ

By Saravana Rajan

ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் புதிய வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இந்த புதிய மாடலின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விரைவில் அறிமுகம்!!

இந்தியாவின் சிறந்த ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களில் ஒன்று ஃபோர்ஸ் குர்கா. இந்த நிலையில், ஆஃப்ரோடு பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அதிக சக்திவாய்ந்த புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விரைவில் அறிமுகம்!!

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ப்ளோர் 3 டோர் மாடலின் அடிப்படையில் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டதாக குர்கா எக்ஸ்ட்ரீம் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. ஹார்டு டாப் மற்றும் சாஃப்ட் டாப் ஆகிய இரண்டு மாடல்களிலுமே இந்த குர்கா எக்ஸ்ட்ரீம் கிடைக்கும்.

புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விரைவில் அறிமுகம்!!

தற்போது விற்பனையில் இருக்கும் குர்கா எஸ்யூவிக்கும் புதிதாக வரும் குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலுக்கும் தோற்றத்தில் அதிக வித்தியாசங்கள் இருக்காது. ஆனால், அதிக சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் எஞ்சினில் மாறுதல் செய்யப்பட்டு வருகிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விரைவில் அறிமுகம்!!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் OM611 டீசல் எஞ்சின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 2.2 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவியில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 321 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தற்போது பயன்படுத்தப்படும் 84 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.6 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக இந்த 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விரைவில் அறிமுகம்!!

புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் ஜி32 என்ற 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். தற்போது உள்ள மாடலில் பயன்படுத்தப்படும் லோ- ரேஞ்ச் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் முன்புற, பின்புற டிஃபரன்ஷியல் லாக்குகள் இந்த மாடலில் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விரைவில் அறிமுகம்!!

அதிக சக்திவாய்ந்த மாடலாக வரும் ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலில் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டு இருக்கும். இது குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவியின் செயல்திறனுக்கு தாக்குப்பிடிக்கும் விதத்தில், மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விரைவில் அறிமுகம்!!

சரிவான சாலைகளில் செல்வதற்கு ஏதுவாக சஸ்பென்ஷன் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், கிரவுண்ட் கிளியரன்ஸ் 205 மிமீ என்ற அளவில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி 550 மிமீ ஆழமுடைய நீர்நிலைகளில் செல்லும் தகவமைப்பை பெற்றிருக்கிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விரைவில் அறிமுகம்!!

இந்த மாதத்திலேயே இந்த புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், டீலர்களில் முன்பதிவு பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குர்கா எக்ஸ்ப்ளோரர் மாடலைவிட இந்த புதிய எக்ஸ்ட்ரீம் மாடல் விலை அதிகம் இருக்கும். ரூ.14 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Force Motors is all set to introduce a new variant of the Gurkha special utility vehicle. Autocar India reports that the new variant of the off-roader will be called as Force Gurkha Xtreme. The Force Gurkha Xtreme will be based on the three-door version of the Xplorer model.
Story first published: Wednesday, June 20, 2018, 13:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X