ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு!

.போர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் Front lower control arm என்ற காரின் சேஸீயுடன் இணைக்கப்பட்ட முக்கிய சஸ்பென்ஷன் உதிரிபாகத்தின் பற்ற வைப்பில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

By Saravana Rajan

குறைபாடுடைய பாகத்தை பரிசோதிப்பதற்காக, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு!

கடந்த ஆண்டு சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் Front lower control arm என்ற முக்கிய உதிரிபாகத்தின் இணைப்பிற்கான பற்ற வைப்பு இடத்தில் வலு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது காரின் சேஸீயுடன் சஸ்பென்ஷனை இணைக்கும் முக்கிய உதிரிபாகம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு!

மேலும், இந்த உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பின், காரின் ஸ்டீயரிங் கன்ட்ரோல் சிஸ்டம் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட 4,379 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை திரும்ப அழைக்க ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு!

திரும்ப அழைக்கப்படு்ம் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளில் ஃப்ரண்ட் லோயர் கன்ட்ரோல் ஆர்ம் பகுதியின் பற்ற வைப்பு எந்தளவு உறுதியாக இருக்கிறது என்பதை பரிசோதித்து, குறைபாடு இருந்தால் அதனை சரிசெய்து தரப்படும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு!

இதுதவிர்த்து, கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளில் முன் இருக்கையில் சாய்மான வசதியை கட்டுப்படுத்தும் லாக் சிஸ்டத்திலும் பிரச்னை இருப்பது தெரிய வந்துள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு!

மொத்தம் 1,018 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளில் இந்த பிரச்னை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கார்களும் திரும்ப அழைத்து பிரச்னை சரிசெய்து தரப்பட உள்ளதாக ஃபோர்டு கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு!

திரும்ப அழைக்கப்படும் ஈக்கோஸ்போர்ட் கார்களில் இருக்கும் பிரச்னைகளை கட்டமில்லாமல் சரிசெய்து தரப்படும் என்றும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு!

வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சேவையை வழங்கும் விதத்தில், தாமாக முன்வந்து இந்த ரீகால் அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக ஃபோர்டு கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ford
English summary
Ford India has announced the recall of 4,379 EcoSport vehicles. The voluntary recall of the EcoSport includes those produced in Ford's plant in Chennai between May and June 2017.
Story first published: Saturday, July 7, 2018, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X