புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரை அமேஸான் தளத்தில் முன்பதிவு வசதி!!

Written By:

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு அமேஸான் தளத்தின் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு அமேஸான் செயலியில் முன்பதிவு!

அமேஸான் இணையதளம் அல்லது மொபைல் செயலியில் திறக்கப்பட இருக்கும் சிறப்பு பக்கத்தில், நாளை மதியம் 2 மணிக்கு துவங்க இருக்கிறது. 24 மணி நேரம் மட்டுமே இந்த முன்பதிவு வசதிக்கு கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 100 கார்கள் மட்டுமே அமேஸான் தளத்தின் மூலமாக முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு அமேஸான் செயலியில் முன்பதிவு!

ரூ.10,000 முன்பணம் செலுத்தி புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் கார் டெலிவிரி கொடுக்கப்படும்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு அமேஸான் செயலியில் முன்பதிவு!

அமேஸான் செயலியில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கான முன்பதிவு பக்கத்தில் காரின் வேரியண்ட், எஞ்சின் மற்றும் வண்ணங்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு அமேஸான் செயலியில் முன்பதிவு!

ஃபோர்டு ஃபிகோ காரின் அடிப்படையில் க்ராஸ்ஓவர் ரக மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் தோற்றத்தில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு அமேஸான் செயலியில் முன்பதிவு!

இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் எஞ்சின் 95 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு அமேஸான் செயலியில் முன்பதிவு!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.4 கிமீ மைலேஜையும் வழங்கும். இந்த காரில் 42 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் இருக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு அமேஸான் செயலியில் முன்பதிவு!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் ஆம்பியன்ட், டிரென்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. கேன்யோன் ரிட்ஜ், மூன்டஸ்ட் சில்வர், ஸ்மோக் க்ரே, ஒயிட் கோல்டு, ஆக்ஸ்ஃபோர்டு ஒயிட் மற்றும் அப்சொலியூட் பிளாக் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு அமேஸான் செயலியில் முன்பதிவு!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், எஞ்சின் புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்மார்ட் கீ உள்ளிட்ட உயர்வகை வசதிகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு அமேஸான் செயலியில் முன்பதிவு!

ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கீ லெஸ் என்ட்ரி, ஆக்டிவ் ரோல்ஓவர் புரொடெக்ஷன் மற்றும் எமர்ஜென்ஸி அசிஸ்டென்ஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்றிருக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு அமேஸான் செயலியில் முன்பதிவு!

ரூ.6 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 18ந் தேதி விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும்.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford India has announced that it's latest offering, the Freestyle, can be booked online exclusively at Amazon India. Customers will be able to book the vehicle during an exclusive booking-window of 24 hours, starting from 2 PM on the 14th April 2018.
Story first published: Friday, April 13, 2018, 10:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark