ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்!!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வி

By Saravana Rajan

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்!!

கடந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் க்ராஸ்ஓவர் ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டது. ஃபோர்டு ஃபிகோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த கார் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி ரக கார்களுக்கு உரிய சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்!!

இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில்,விரைவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்!!

மும்பை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் 40 சதவீத வாடிக்கையாளர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை தேர்வு செய்கின்றனர். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் 20 சதவீதம் அளவுக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் விதத்தில், ஃப்ரீஸ்டைல் காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை வழங்குவது குறித்து ஃபோர்டு நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்!!

மேலும், விலையை கட்டுக்குள் வைப்பதற்காக உள்ளூர் சப்ளையர்களிடமிருந்து உதிரிபாகங்களை பெற்று பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஃபோர்டு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது ஃபோர்டு ஃபிகோ காரில் 85 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்!!

ஃபிகோ அடிப்படையிலான இந்த காரில் புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎஸ் பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது. டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 98.6 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்!!

தற்போது பெட்ரோல், டீசல் என இண்டிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுதான் கொடுக்கப்படுகிறது. இந்தநிலையில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் 1.5 லிட்டர் டிராகன் வரிசை பெட்்ரோல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்ட 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை இந்த காரிலும் கொடுக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்!!

இதன்மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக இந்த ரகத்தில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் அமையும். போட்டியாளர்களைவிட விலையும் குறைவான தேர்வாக இருப்பதால், நிச்சயம் இது வர்த்தக ரீதியில் சிறப்பாக இருக்கும் என்று ஃபோர்டு நிறுவனம் கருதுகிறது. அதிக கிரவுண்ட் க்ளியரன்ஸ், நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த காரின் மிக முக்கிய ப்ளஸ் பாயிண்ட்டுகளாக இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ford
English summary
Ford Freestyle to get an Automatic variant soon.
Story first published: Friday, July 20, 2018, 14:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X