புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்... புதிய காம்பேக்ட் க்ராஸ்ஓவர் கார் அறிமுகம்: விபரம்!

Written By:

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் என்ற புதிய காம்பேக்ட் க்ராஸ்ஓவர் ரக கார் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய கார் அறிமுக நிகழ்ச்சியிலிருந்து எமது எடிட்டர் ஜோபோ குருவில்லா தரும் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் அறிமுகம்: விபரம்

ஃபோர்டு ஃபிகோ காரின் அடிப்படையில் எஸ்யூவி கார்களுக்குரிய கூடுதல் சிறப்பம்சங்களுடன் க்ராஸ்ஓவர் ரக மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது ஃபோர்டு ஃப்ரீஸ்டைல். இந்த கார் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் அறிமுகம்: விபரம்

ஃபோர்டு நிறுவனத்தின் புதிய டிராகன் குடும்ப வரிசையில் வெளியிடப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 3 சிலிண்டர்கள் கொண்ட இந்த எஞ்சின் இதன் ரகத்தை ஒப்பிடும்போது, சக்திவாய்ந்ததாக இருக்கிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் அறிமுகம்: விபரம்

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 94.6பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. புதிய 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சினைப் போலவே இதுவும் புதிது என்பது குறிப்பிடத்தக்கது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் அறிமுகம்: விபரம்

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் சாதாரண ஃபிகோ காரைவிட 15 மிமீ கூடுதல் தரை இடைவெளி கொண்டதாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 15 அங்குல சக்கரங்களும், 185/60 ஆர்15 அளவுடைய குட்இயர் அஸ்யூரன்ஸ் டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் அறிமுகம்: விபரம்

ஃபிகோவிலிருந்து வேறுபடுத்துவதற்காக சில டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் மஸ்டாங் காரின் க்ரில் அமைப்பை நினைவூட்டும் வடிவிலான அறுகோண தேன்கூடு அமைப்புடைய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் அறிமுகம்: விபரம்

முகப்பு க்ரில் அமைப்பின் இருபுறங்களிலும் ஹெட்லைட் இணைக்கப்பட்டு இருப்பது போன்று தோற்றமளிக்கிறது. எஸ்யூவி கார் போன்ற தோற்றத்தை வழங்கும் வகையில், ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் அறிமுகம்: விபரம்

காரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டம் கொடுக்கப்பட்டு இருப்பதும், கூரையில் ரூஃப் ரெயில் சட்டங்களும் எஸ்யூவி போன்ற தோற்றத்தை கொடுக்கின்றன. பின்புறத்தில் சில மாற்றங்களை தவிர்த்து, ஃபிகோ கார் போன்ற தோற்றத்தை பெறறிருக்கிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் அறிமுகம்: விபரம்

ஃபோர்டு ஃபிகோ காரின் இன்டீரியர் அமைப்புதான் இதிலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், புதிய 6.5 அங்குல திரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் அறிமுகம்: விபரம்

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபோர்டு சிங்க்3 தகவல் தொழில்நுட்ப வசதி இருப்பதுடன், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்ற சாஃப்ட்வேர்களையும் சப்போர்ட் செய்யும்.

 புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் அறிமுகம்: விபரம்

இந்திய சாலைநிலைகளுக்கு ஏற்ப அதிக தரை இடைவெளி, சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் எஸ்யூவி தோற்றத்துடன் வாடிக்கையாளர்களை வசீகரிக்க வருகிறது ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார். அதிக தரை இடைவெளியுடன் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் காரை வாங்க திட்டமிடுபவர்களுக்கு இது நல்ல சாய்ஸாக அமையலாம்.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Freestyle unveiled. The global unveils of the Ford Freestyle in India sees the American carmaker enter the compact utility vehicle for the first time.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark