ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

Written By:

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கான இணையதள பக்கம் செயல்பட துவங்கி இருப்பதுடன், இந்த காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

ஃபோர்டு ஃபிகோ காரின் அடிப்படையில் எஸ்யூவி ரக வாகனம் போல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் சியூவி என்ற புதிய ரகத்தில் ஃபோர்டு நிறுவனம் களமிறக்க இருக்கிறது. இந்த கார் ஆம்பியன்ட், ட்ரென்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் க்ராஸ்ஓவர் ரக கார் கேன்யோன் ரிட்ஜ், மூன்டஸ்ட் சில்வர், ஸ்மோக் க்ரே, ஒயிட் கோல்டு, ஆக்ஸ்போர்டு ஒயிட் மற்றும் அப்சொலியூட் பிளாக் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் 94.6 பிஎச்பி பவரையும், டீசல் எஞ்சின் 98.6 பிஎச்பி பவரையும் அளிக்க வல்லது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.4 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

ஆம்பியன்ட் என்ற விலை குறைவான வேரியண்ட் தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்ட்டுகளிலும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெறுகிறது. டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் கார் நிலைதடுமாறி கவிழ்வதை தவிர்க்கும் ஆக்டிவ் ரோல்ஓவர் புரொடெக்ஷன் என்ற பாதுகாப்பு அம்சம் இடம்பெறுகிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

அனைத்து வேரியண்ட்டுகளிலும் இரண்டு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட இருக்கிறது. பிரேக் பவரை அனைத்து சக்கரங்களுக்கும் சரிவிகிதத்தில் செலுத்தும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெறுகிறது. இதுதவிர, கூடுதலாக ஏர்பேக்குகள், எமெர்ஜென்சி அசிஸ்ட் , அப்ரோச் சென்சார்கள், ஆட்டோமேட்டிக் டோர் லாக் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுகிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

விலை உயர்ந்த வேரியண்ட்டில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர் ஃபோல்டு ரியர் நியூ மிரர்க்ள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், எஞ்சின் புஷ் பட்டன் ஸ்டார்ட்ட வசதி மற்றும் ஃபோர்டு மைகீ என்ற ஸ்மார்ட் சாவி சாதனம் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

இவை தவிர்த்து, ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு பாடி டீக்கெல் ஸ்டிக்கர்கள், கூரைக்கான ஸ்டிக்கர், விசேஷ சீட் கவர்கள், ரியர் ஸ்பாய்லர், ஷார்க் ஃபின் ஆன்டென்னா, 15 அங்குல அலாய் வீல்கள் உள்ளிட்டவை கூடுதல் ஆக்சஸெரீகளாக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து வாங்க முடியும்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

விலை குறைவான வேரியண்ட்டடை தேர்வு செய்பவர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், தலையணை, ரியர் வியூ கேமரா, ரூஃப் ரெயில்கள், ஸ்மார்ட் ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியைவயும் கூடுதலாக ஆக்சஸெரீகளாக பெற்று பொருத்திக் கொள்ளலாம்.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் விற்பனைக்கு வரும் புதிய கார்கள் பட்டியலில் இருக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரை நாளை ஜெய்ப்பூரில் நடைபெறும் மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்ய இருக்கிறது. விரைவில் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford India is all set to launch the Freestyle in India. The company calls the Freestyle as India's first Compact Utility Vehicle (CUV). Now, the website of the Freestyle has gone live and key details such as variants, features, accessories and mileage have been revealed.
Story first published: Wednesday, April 4, 2018, 14:13 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark