TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
ஒத்த பைசா இல்லாமல் புதிய டெயோட்டா யாரிஸ் காரை வாங்கும் புதிய திட்டம்!!
அரசு பணியாளர்கள் முன்பணம் செலுத்தாமல் டொயோட்டா யாரிஸ் காரை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு திட்டம் குறித்து முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் அதிக வசதிகளுடன் வந்த டொயோட்டா யாரிஸ் கார் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பவர் அட்ஜெஸ்ட் டிரைவர் சீட், 7 எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள், ரூஃப் மவுண்ட் ஏர் வென்ட்டுகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், அனைத்து வேரியண்ட்டுகளிலும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் என அசத்தலான அம்சங்களை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற ஜாம்பவான் மாடல்களை எதிர்கொள்ளும் விதமாக, புதிய திட்டத்தை டொயோட்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அரசு பணியாளர்கள், பாதுகாப்புத் துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்காக, 'Drive the Nation' என்ற சிறப்பு திட்டத்தை டொயோட்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் முன்பணம் செலுத்தாமல் கார் வாங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பொதுவாக, எக்ஸ்ஷோரூம் விலையில் 100 சதவீதம் வரை கடன் வழங்கும் வசதியை நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வழங்குகின்றன. ஆனால், இந்த சிறப்பு திட்டத்தின்படி, முன்பணம் இல்லாமல் ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் அளவுக்கு கடன் பெறும் வசதியை டொயோட்டா அறிமுகம் செய்தது.
மேலும், மாதத் தவணையும் குறைவாக இருக்கும் விதத்தில் 8 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே, இந்த திட்டத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளிட்ட கார்கள் உள்ளன.
இந்த நிலையில், தற்போது டொயோட்டா யாரிஸ் காருக்கும் ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் வரை அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கடன் பெறும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, இந்த திட்டத்தின் கீழ், சிறப்பு காப்பீட்டு திட்டம், கூடுதல் வாரண்டி காலம் மற்றும் ஒரிஜினல் ஆக்சஸெரீகள் மீது சலுகைகள் பெறும் வாய்ப்பும் இருக்கிறது.
நாடுமுழுவதும் உள்ள அனைத்து டொயோட்டா டீலர்களிலும் அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கா விசேஷ விற்பனை பிரதிநிதிகளும் செயல்படுவார்கள். இவர்கள் டொயோட்டா யாரிஸ் கார் வாங்க வரும் அரசு ஊழியர்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்கள் கார் வாங்கும் நடைமுறையை எளிமையாக செய்து கொடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.