2018 ஆட்டோ எக்ஸ்போவில் கலக்கிய புதிய ஹோண்டா அமேஸ் காரில் என்ன என்ன ஸ்பெஷல்..?? முழு விபரம்..!!

Written By:

ஹோண்டா கார்ஸ் நிறுவனம் புதிய தலைமுறைக்கான அமேஸ் காரை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. புதிய வடிவமைப்பு, புதிய செயல்பாட்டுடன் காட்சிக்கு வந்த 2018 அமேஸ் கார் கண்காட்சியில் பெரியளவில் கவனமீர்த்தது.

2018 ஹோண்டா அமேஸ் காரின் டாப் சிறப்பம்சங்கள்: முழுத் தகவல்கள்..!!

ஹோண்டா சிட்டி காரின் தற்போதைய மாடலுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரின் உள்கட்டமைப்புகளும் பெரியளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஹோண்டா அமேஸ் காரின் டாப் சிறப்பம்சங்கள்: முழுத் தகவல்கள்..!!

2வது தலைமுறையாக வெளியான 2018 ஹோண்டா அமேஸ் கார் புதிய பிளாட்ஃப்பார்மில் உருவானது. தற்போதைய அமேஸ் மாடல் ஹோண்டா பிரையோ ஹேட்ச்பேக் பிளாட்ஃப்பார்மில் தயாரானது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய வடிவில் வெளியான ஹோண்டா அமேஸ் காரின் புத்தம் புதிய டாப் 5 சிறப்பம்சங்களை விவரமாக பார்க்கலாம்.

2018 ஹோண்டா அமேஸ் காரின் வெளிப்புறத்தோற்றம்

2018 ஹோண்டா அமேஸ் காரின் வெளிப்புறத்தோற்றம்

புதிய தலைமுறை அமேஸ் கார் பாப்பதற்கு ஹோண்டா சிட்டி மற்றும் அக்கார்டு கார் போல உள்ளது. 2018 அமேஸ் காரின் முன்பக்கத்தில் க்ரில் பெரியளவில் கவனமீர்க்கிறது.

2018 ஹோண்டா அமேஸ் காரின் டாப் சிறப்பம்சங்கள்: முழுத் தகவல்கள்..!!

முகப்பு விளக்குகள் இந்த காரில் செவ்வக வடிவில் உள்ளன. தவிர இந்த காரின் முன்பக்க பம்பரும் புதிய டிசைனிங் தேர்வை பெற்றிருப்பது புதுமையாக உள்ளது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
2018 ஹோண்டா அமேஸ் காரின் டாப் சிறப்பம்சங்கள்: முழுத் தகவல்கள்..!!

பக்கவாட்டு பகுதியிலும் ஹோண்டா புதிய அமேஸ் அசரடிக்கத்தான் செய்கிறது. 4 மீட்டர் நிளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரில் 15 இஞ்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

2018 ஹோண்டா அமேஸ் காரின் டாப் சிறப்பம்சங்கள்: முழுத் தகவல்கள்..!!

ஹோண்டா அமேஸின் காரின் பின்பகுதியில் சி-ஷேப்டு டெயில் விளக்குகள், ரியர் பம்பரில் செதுக்கப்பட்ட வடிவம், மற்றும் எக்ஸாஸ்ட் பைப்பிற்கான சிறியளவு குரூவ் ஆகியவை புதுசாக அமைக்கப்பட்டுள்ளன.

2018 ஹோண்டா அமேஸ் காரின் உட்புற கட்டமைப்பு

2018 ஹோண்டா அமேஸ் காரின் உட்புற கட்டமைப்பு

3 ஸ்போக் அலாய் சக்கரங்கள், 7 இஞ்ச் தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், டூயல்-டோன் டாஷ்போர்டு மற்றும் பியா-ஃபினிஷ் என காரின் மொத்த டாஷ்போர்டே ரனகளப்படுத்துகிறது.

தவிர தொழில்நுட்ப தேர்வுகளில் கிளைமேட்-கன்ட்ரோல் லே-அவுட் பட்டன் ஹோண்டா 2018 அமேஸ் காருக்கு புத்துணர்வு பாய்ச்சுகிறது.

புதிய ஹோண்டா அமேஸ் சிவிடி கியர்பாக்ஸ்

புதிய ஹோண்டா அமேஸ் சிவிடி கியர்பாக்ஸ்

இந்த புதிய தலைமுறை அமேஸ் காரில் ஹோண்டா நிறுவனம் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பொருத்தியுள்ளது. இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுடனும் அமேஸ் விற்பனைக்கு வருகிறது.

2018 ஹோண்டா அமேஸ் காரின் டாப் சிறப்பம்சங்கள்: முழுத் தகவல்கள்..!!

தற்போது பயன்பாட்டில் உள்ள அமேஸ் காரின் டீசல் வேரியன்டில் சிவிடி கியர்பாக்ஸ் கிடையாது. ஆனால் இந்த புதிய தலைமுறை மாடலின் டீசல் காரில் சிவிடி கியர்பாக்ஸ் இருப்பது புதிய செய்தி.

2018 ஹோண்டா அமேஸ் காரின் டாப் சிறப்பம்சங்கள்: முழுத் தகவல்கள்..!!

சிவிடி பொருத்தப்பட்ட அமேஸ் கார் வேரியன்ட், மெல்லிய டிரைங்கை தரும் என்பது உண்மை. ஆனால் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல்களுக்கு சில ஜர்க் இருக்கும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஹோண்டா அமேஸ் காரின் பாதுகாப்பு அம்சங்கள்

2018 அமேஸ் காரின் மல்டிபிள் ஏர்பேகுகள், ஏபிஸ், இபிடி மற்றும் இஎஸ்பி போன்ற அம்சங்கள் தற்போதைய மாடலில் இருப்பதை விட கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

2018 ஹோண்டா அமேஸ் காரின் டாப் சிறப்பம்சங்கள்: முழுத் தகவல்கள்..!!

தவிர டூயல் ஏர்பேகுகள், ஏபிஸ் கூடிய பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை 2018 அமேஸ் காரின் சராசரியான எல்லா மாடலிலும் தவறாது இடம்பெற்றிருக்கும்.

2018 ஹோண்டா அமேஸ் காரின் சிறப்பம்சங்கள்

2018 ஹோண்டா அமேஸ் காரின் சிறப்பம்சங்கள்

இதனுடைய டாப் வேரியன்ட் மாடலில் கீலெஸ் எண்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. முதன்முதலாக அமேஸ் காரில் க்ரூஸ் கண்ட்ரோல் தொழில்நுட்பத்தை ஹோண்டா பொருத்தியுள்ளது.

2018 ஹோண்டா அமேஸ் காரின் டாப் சிறப்பம்சங்கள்: முழுத் தகவல்கள்..!!

பார்க்கிங் சென்சார்கள், ரியர்-வியூ கேமரா போன்ற அம்சங்களும் இந்த காரில் உள்ளது. ஹோண்டா அமேஸ் காரின் வடிவமைப்பிற்கு ஏற்றவாறு இந்த காரின் ஆன்ட்டனா சுறா மீனின் துடுப்பு வடிவில் உள்ளது.

2018 ஹோண்டா அமேஸ் காரின் டாப் சிறப்பம்சங்கள்: முழுத் தகவல்கள்..!!

கார் விற்பனையில் நிலவும் போட்டியை சமாளிக்க காரின் பயன்பாட்டிற்கு வேண்டிய அத்தனை அம்சங்களுடன் புதிய அமேஸ் காரை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது ஹோண்டா. இது வாடிக்கையாளர்களிடமும் பெரிய கவனத்தை பெற்றுள்ளது என்பதை இங்கே குறிப்பிட்ட ஆகவேண்டும்.

English summary
Read in Tamil: New Honda Amaze 2018 Top Features. Click for New Design, Interiors, CVT Gearbox & Safety Features...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark