ஹோண்டா கார் விலை உயர்கிறது... அமேஸ் விலையும் அதிகரிக்கிறது!

வரும் ஆகஸ்ட் 1 முதல் ஹோண்டா கார்களின் விலை உயர்த்தப்பட இருக்கிறது. மாடலை பொறுத்து ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை விலை அதிகரிக்கப்பட உள்ளது. அண்மையில் விற்பனைக்கு வந்த புதிய ஹோண்டா அமேஸ் காரின் விலையு

By Saravana Rajan

வரும் ஆகஸ்ட் 1 முதல் ஹோண்டா கார்களின் விலை உயர்த்தப்பட இருக்கிறது. இந்த விலை உயர்வு குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா கார் விலை உயர்கிறது... அமேஸ் விலையும் அதிகரிக்கிறது!

சுங்க வரி, உற்பத்தி செலவீனம் மற்றும் போக்குவரத்து செலவுகள் உயர்ந்துள்ளதையடுத்து, கார்களின் விலையை அதிகரிக்க ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாடல்களை பொறுத்து குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,000 வரை ஹோண்டா கார்களின் விலை அதிகரிக்கப்பட இருக்கிறது.

ஹோண்டா கார் விலை உயர்கிறது... அமேஸ் விலையும் அதிகரிக்கிறது!

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹோண்டா அமேஸ் காரின் விலையும் அதிகரிக்கப்பட இருக்கிறது. அமேஸ் கார் அறிமுகம் செய்யப்படும்போது, அறிமுகச் சலுகை விலையாகத்தான் தெரிவிக்கப்பட்டது.

ஹோண்டா கார் விலை உயர்கிறது... அமேஸ் விலையும் அதிகரிக்கிறது!

ஹோண்டா பிரியோ, ஜாஸ், அமேஸ், சிட்டி,அக்கார்டு ஹைப்ரிட், டபிள்யூஆர்வி, பிஆர்வி மற்றும் சிஆர்-வி உள்ளிட்ட அனைத்து ஹோண்டா கார்களின் விலையும் வரும் 1ந் தேதி முதல் அதிகரிக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

ஹோண்டா கார் விலை உயர்கிறது... அமேஸ் விலையும் அதிகரிக்கிறது!

எனினும், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ரூ.4.73 லட்சம் முதல் ரூ.43.21 லட்சம் வரையிலான விலையில் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

ஹோண்டா கார் விலை உயர்கிறது... அமேஸ் விலையும் அதிகரிக்கிறது!

ஹோண்டா கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்வது நல்லது. மேலும், வரும் 31ந் தேதிக்குள் முன்பதிவு செய்தால் தற்போதைய விலையிலேயே டெலிவிரி கொடுக்கப்படுமா என்பதையும் அறிந்து கொண்டு முன்பதிவு செய்யவும்.

ஹோண்டா கார் விலை உயர்கிறது... அமேஸ் விலையும் அதிகரிக்கிறது!

இதனிடையே, இந்தியாவில் இரண்டு புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய சிஆர்வி மற்றும் சிவிக் கார்களை இந்தியாவில் களமிறக்குவதற்கான திட்டங்களை அந்நிறுவனம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மேலும், தற்போதுள்ள மார்க்கெட் பங்களிப்பை இரண்டு மடங்கு கூடுதலாக்கும் திட்டமும் உள்ளது.

Most Read Articles
English summary
The Indian wing of the Japanese automaker Honda has announced that it will increase the prices of its entire product portfolio. Hyundai will hike the prices of its model in the range of Rs 10,000 to Rs 35,000. The revised price will be effective from August 1, 2018.
Story first published: Tuesday, July 10, 2018, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X