மாருதி , ஹூண்டாய் திட்டங்களை தவிடு பொடியாக்க தீவிரம் காட்டும் ஹோண்டா; இதுதான் கேமிங் பிளான்..!!

Written By:

இந்தியாவில் கார் விற்பனையில் ஹோண்டா நிறுவனம் கொடிக்கட்டி பறக்கிறது. இருந்தாலும் 2014 மற்றும் 2017ம் ஆண்டு கார் விற்பனையில் ஹோண்டா சிறிய சறுக்கல்களை சந்தித்துள்ளது.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

கார் விற்பனையை சிறப்பாக பெற்ற ஆண்டோடு இதை ஒப்பிட்டு பார்க்கும் போது 5 முதல் 7 சதவீத விற்பனை வீழ்ச்சி தான் என்றாலும், ஹோண்டா விடுவதாக இல்லை.

சமீபத்தில் வெளியான டபுள்யூ.ஆர்-வி கார் விற்பனையில் சக்கைப்போடு போட, ஹோண்டா சிறிய இடைவேளைக்கு பிறகு வெற்றிக்கனியை ருசித்தது.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

குறிப்பாக இந்திய சாலைகளுக்கு சிட்டி செடான் கார் செய்த நற்பனியை என்றும் மறக்க இயலாது. தொடர்ந்து சிட்டி தான் செடான் மாடல் விற்பனையில் முன்னணி.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

இதுபோல கார் விற்பனை சந்தையில் ஹோண்டாவிற்கு கிடைத்த குறிப்பிட தகுந்த வெற்றிகளின் மூலம், தனது விற்பனை வீழ்ச்சியை நிலைநிறுத்த புதிய திட்டங்களை அந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

அதில் முதற்கட்டமான அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய ரக மூன்று கார்களை ஹோண்டா இந்திய சந்தைக்காக வழங்கவுள்ளது. அவற்றில் ஒரு கார் சி.ஆர்-வி, மற்றது சிவிக் பிறகு புதிய தலைமுறை அமேஸ் கார்.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

ஹோண்டாவின் இந்த திட்டம் வரவேற்பு பெறும் விதமாக சமீபத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட புதிய அமேஸ் கார் இந்தியா வாடிக்கையாளர்களின் பெரிய கவனத்தை பெற்றுள்ளது.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

இதுக்குறித்து பேசிய ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் யோச்சிரோ யுனோ,

ஆட்டோ எக்ஸ்போ அறிமுகத்தின் மூலம் புதிய அமேஸ் காருக்கு கிடைத்துள்ள வரவேற்பு, விற்பனைக்கு வரும் போது அந்த காரை வெற்றி மாடலாக உருவாகும் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

தொடர்ந்து ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா அறிமுகம் செய்த புதிய சிவிக் கார் மற்றொரு பிரேக்கிங் செய்தி என்று சொல்லலாம்.

பார்வையாளர்களை பெரிதாக கவர்ந்துள்ள இந்த புதிய சிவிக் கார், இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

தற்போதைய சிவிக் கார் மாடலை அப்டேட் செய்து வழங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய கோரிக்கை ஒலித்து வருகிறது.

இந்த தேவையை சரியாக பயன்படுத்தும் விதமாக நேரம் பார்த்து புதிய சிவிக் மாடலை எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது ஹோண்டா.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

புதிய சிவிக் வெளிவருவது குறித்து பேசிய யோச்சிரோ யுனோ, சிவிக் காரை அப்டேட் செய்து வழங்குமாறு இந்திய வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஹோண்டா மனதார ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

ஆண்டிற்கு 3 லட்சம் கார்களை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. அதில் தற்போது 70 சதவீத உற்பத்தியை தொடங்க சித்தமாக அந்நிறுவனம் தயாராகி வருகிறது.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

தொடர்ந்து உருவாகும் தேவையை பொறுத்து, இந்தியாவில் உள்ள தனது ஆலைகளில் கார் உற்பத்தியை ஹோண்டா மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

இந்தியாவில் சிகேடி பிளாட்ஃப்பார்மிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோண்டா சர்வதேச கார் விற்பனை சந்தைக்கு புதிய ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளது.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சிறிய விற்பனையை வீழ்ச்சியை சரிக்கட்ட ஹோண்டா ஏற்படுத்திக்கொண்டுள்ள இந்த உறுதிப்பாடு, இந்தியாவின் மற்ற முன்னணி கார் நிறுவனங்கள் மத்தியில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

புதிய முதலீடு மற்றும் பொருட்கள் தயாரிப்போடு மட்டுமில்லாமல், இந்திய கார் விற்பனை சந்தையில் ஹோண்டா தனக்கான சந்தை நிலவரத்தை இரண்டு மடங்காக பெருக்கிக்கொண்டுள்ளது.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

குறிப்பிட்ட கார் விற்பனையில் மாருதி சுஸுகி, ஹூண்டாய் தான் கிங். அதற்கு சரிநிகர் போட்டியை தர கியா நிறுவனமும் இந்தியாவில் நுழைகிறது. இதை ஈடுக்கட்ட ஹோண்டா கால்பதித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சந்தை விற்பனையை 2 மடங்காக்க ஹோண்டாவின் அலேக் ஐடியா..!!

புதிய ரக மூன்று கார்கள், விற்பனை சந்தையை இரண்டு மடங்காக பெருக்கிக்கொண்டுள்ளது போன்ற ஆயத்தங்கள் ஹோண்டாவின் முதற்கட்ட நடவடிக்கை தான்.

மாருதி சுஸுகி, ஹூண்டாய் கைகளில் இருக்கும் குறிப்பிட்ட கார் செக்மென்டுகளை கைப்பற்ற ஹோண்டா இன்னும் பல அதிரடி முடிவுகளை வெளியிடும் என்பதே இதில் மறைந்திருக்கும் உண்மை.

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Read in Tamil: Honda Cars Plan to Double the Market Share in India. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark