2018 ஆட்டோ எக்ஸ்போ: 10வது தலைமுறை சிவிக் காருடன் களமிறங்கும் ஹோண்டா; புகைப்படங்களுடன் தகவல்கள்..!!

Written By:

ஹோண்டாவின் மேம்படுத்தப்பட்ட சிவிக் செடான் கார் டெல்லி நொய்டாவில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

10வது தலைமுறை மாடலாக வெளிவரும் இந்த புதிய செடான் கார் 2019ம் ஆண்டு  தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்தியாவில் மட்டுமல்ல, மேலும் பல சர்வதேச நாடுகளிலும் பிரபல செடான் மாடலாக வலம் வருகிறது ஹோண்டா சிவிக் கார். அதற்கேற்ற அப்டேட்டுன் இந்தியாவிற்கான புதிய சிவிக் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை சிவிக் காரை காட்சிப்படுத்திய ஹோண்டா..!!

வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா சிவிக் காரில் பெட்ரோல் தேர்வில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ, டர்போ 1.5 லிட்டர் 4 பாட் மற்றும் 2.0 லிட்டர் நேச்சுரலி ஏஸ்பிரேடட் 4 சிலிண்டர் உள்ளிட்ட எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது.

புதிய தலைமுறை சிவிக் காரை காட்சிப்படுத்திய ஹோண்டா..!!

தொடர்ந்து டீசல் மாடல் ஹோண்டா சிவிக் கார் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் ஆகிய தேர்வுடன் மட்டும் சர்வதேச சந்தையில் விற்பனையாகிறது. இவற்றில் உள்ள எஞ்சின் தேர்வுகளில் எதாவது ஒன்றை பின்பற்றி சிவிக் வெளியாகலாம் என்று சொல்லப்பட்டது.

புதிய தலைமுறை சிவிக் காரை காட்சிப்படுத்திய ஹோண்டா..!!

அதன்படி, 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதிய ஹோண்டா சிவிக் கார், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் ஆகிய எஞ்சின் தேர்வுகளில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை சிவிக் காரை காட்சிப்படுத்திய ஹோண்டா..!!

வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் மாடல் சிவிக் கார் 158 பிஎச்பி மற்றும் 187 டார்க் திறனை வழங்குகிறது. இதில் கியர்பாக்ஸ் ஆட்டோமேட்டிக் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் ஆகிய தேர்வுகளில் கிடைக்கிறது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய தலைமுறை சிவிக் காரை காட்சிப்படுத்திய ஹோண்டா..!!

டீசல் மாடல் ஹோண்டா சிவிக் கார் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி பவர் மற்றும் 300 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். டீசல் சிவிக் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது.

புதிய தலைமுறை சிவிக் காரை காட்சிப்படுத்திய ஹோண்டா..!!

இந்த புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் கார் 4630 மிமீ நீளம், 1799 மிமீ அகலம், 1416 மிமீ உயரம் ஆகிய அளவுகளில் கிடைக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் 2700 மீமீ நீளம் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவமைப்பு & அம்சங்கள்

வடிவமைப்பு & அம்சங்கள்

பார்ப்பதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள சிவிக் கார் போலவே இந்த புதிய தலைமுறை மாடல் காட்சியளித்தாலும், இதனுடைய டிசைனிங் நுட்பங்கள் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை சிவிக் காரை காட்சிப்படுத்திய ஹோண்டா..!!

காரின் முன்பகுதியில் உள்ள கிரோம் க்ரில் கண்ணை பரிக்கிறது. அதற்கு இரண்டு பக்க பகுதிகளிலும் எல்.இ.டி கொண்ட முகப்பு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பக்கவாட்டு பகுதியில் இழையோடும் கேரக்ட்டர் லைன் சிறப்பாக உள்ளது மற்றும் அலாய் சக்கரங்களுக்கான ஆர்க் தனித்துவமான வடிவமைப்புடன் மிளிர்கிறது.

புதிய தலைமுறை சிவிக் காரை காட்சிப்படுத்திய ஹோண்டா..!!

புதிய சிவிக் காரின் பின்பகுதியின் இரண்டு பக்கங்களிலும் ஆங்கில C எழுத்து வடிவிலான எல்.இ.டி டெயில் விளக்குகள் உள்ளன. இது காரின் ரியர் பகுதியை பெரிதும் கவர்கின்றன.

புதிய தலைமுறை சிவிக் காரை காட்சிப்படுத்திய ஹோண்டா..!!

இந்த காரின் உட்புற கட்டமைப்பு அப்படியே ஹோண்டா அக்கார்டு காரை நினைவிற்கு கொண்டு வருகின்றன. இதனால் முந்தைய மாடலை விட புதிய காரின் உள்கட்டமைப்புகள் பெரிதும் மாற்றம் கண்டுள்ளன.

புதிய தலைமுறை சிவிக் காரை காட்சிப்படுத்திய ஹோண்டா..!!

உட்புற கட்டமைப்புகள் டூயல்-டோன் பிளாக் மற்றும் பீஜ் நிறங்களை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் தொடுதிரைக்கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் பிரதானம் வகிக்கிறது.

புதிய தலைமுறை சிவிக் காரை காட்சிப்படுத்திய ஹோண்டா..!!

ஹோண்டா சிவிக் கார் மேம்படுத்தப்பட்ட வடிவில் வருவது செடான் காரை வாங்க காத்திருப்பவர்களுக்கு ஒரு போட்டியை உருவாக்க உள்ளது.

அதற்கான சிறந்த வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட அம்சங்களுடன் புதிய தலைமுறைக்கான ஹோண்டா சிவிக் கார் தயாராகியுள்ளது.

English summary
Read in Tamil: Honda Civic Showcased - Expected Price, Launch Date, Specs, Features & Images. Click for Details...
Story first published: Thursday, February 8, 2018, 16:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark