புதிய ஹோண்டா எச்ஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த தகவல்கள்: க்ரெட்டா போட்டியாளர்!

Written By:

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், புதிய ஹோண்டா எச்ஆர்வி க்ராஸ்ஓவர் ரக கார் காட்சிக்கு வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு போட்டியான ரகத்தில் இந்த கார் வர இருக்கிறது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த தகவல்கள்!

இந்த சூழலில் ஜப்பானில் அறிமுகமாக இருக்கும் புதிய ஹோண்டா எச்ஆர்வி காரின் மாடல் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன. வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் இந்த மாடல்தான் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது தகவல்.

புதிய ஹோண்டா எச்ஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த தகவல்கள்!

ஜப்பானில் ஹோண்டா வெஸல் என்ற பெயரிலான இந்த கார் இந்தியாவில் எச்ஆர்வி என்ற பெயரில் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா நிறுவனத்தின் நவீன டிசைன் தாத்பரியங்களுடன் இந்த புதிய மாடல் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த தகவல்கள்!

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் மற்றும் பம்பர், பெரிய அளவிலான ஏர் டேம் ஆகியவற்றுடன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. ஹோண்டாவின் க்ரோம் பூச்சு க்ரில் முத்தாய்ப்பான விஷயமாக பார்க்க முடிகிறது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த தகவல்கள்!

இணையதளத்தில் வெளியான படங்களில் முன்பகுதி மட்டுமே தெரிகிறது. பின்புறத்தில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்ள இயலவில்லை. அதேநேரத்தில், டெயில் லைட்டுகளுக்கு இடையில் க்ரோம் பட்டை கொடுக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

புதிய ஹோண்டா எச்ஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த தகவல்கள்!

இன்டீரியரில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. புதிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். டேஷ்போர்டு டிசைனிலும் மாற்றங்கள் இல்லை.

புதிய ஹோண்டா எச்ஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த தகவல்கள்!

ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா எச்ஆர்வி கார் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.8 லிட்டர் பெட்ரோல், 1.6 லிட்டர் டீசல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் துணை கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஹைப்ரிட் என 4 எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் வரும்போது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா எச்ஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த தகவல்கள்!

அடுத்த மாதம் புதிய ஹோண்டா எச்ஆர்வி ஜப்பானில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா எச்ஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த தகவல்கள்!

ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியான ரகத்திலும், விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

English summary
The leaked image of the HR-V facelift reveals the updated styling of the crossover. In the Japanese market, the crossover will be sold under the Vezel moniker, but it will be renamed when it is launched in India. The facelifted HR-V features Honda's latest design language which is seen on the City facelift.
Story first published: Thursday, January 25, 2018, 10:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark