2018 ஆட்டோ எக்ஸ்போ லைவ்: புதிய ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம்; படங்களுடன் தகவல்..!!

Posted By:

டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய அமேஸ் செடான் காரை அறிமுகம் செய்தது ஹோண்டா.

இதுவரையிலான வடிவமைப்பிலிருந்து முற்றிலும் மாறிப்போன தோற்றத்தில் ஆச்சர்யம் அளிக்கிறது புதிய அமேஸ் கார்.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமான அமேஸ் கார், தற்போது மேம்படுத்தப்பட்ட பிறகும் பழையை சப்-4 மீட்டர் செடான் மாடலிலேயே தொடர்கிறது.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

புதிய அமேஸ் காரின் முன்பக்க பகுதியை பார்க்கும் போது 10வது தலைமுறை அக்கார்டு காரின் தோற்றத்தை தருகிறது. மேலும் பல ப்ரீமியம் தர வடிவமைப்புகளையும் இந்த காரில் பார்க்க முடிகிறது.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

ஹோண்டாவிற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை நிர்வகித்து வரும் அமைப்பு தாய்லாந்தில் செயல்பட்டு வருகிறது. அங்குதான் இந்த இரண்டாவது தலைமுறை அமேஸ் கார் திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

தற்போதைய மாடலை விட புதிய மாடலில் பானட் முன்பக்கம் கொஞ்சம் நீண்டுள்ளது. அதேபோல காரின் முகப்பு விளக்குகளுக்கு மிக நெருக்கமாக முன்பக்க க்ரில் அமைக்கப்பட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

புதிய அமேஸ் காரின் முகப்பு விளக்குகள், எல்.இ.டி பகல்நேர விளக்குகளுடன் உள்ளது. இது காரின் முன்பக்க பகுதிக்கு ஸ்டைலான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

முன்னர் இருந்த மாடலில் 14 இஞ்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டு இருந்த நிலையில், புதிய தலைமுறை அமேஸ் காரில் 15 இஞ்ச் சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

காரின் பூட் பகுதி மிகவும் கூர்மையான தோற்றத்திலும் தற்போதைய மாடலை விட சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. புதிய அமேஸ் காரின் எல்.இ.டி டெயில் விளக்குகளும் அசரடிக்கின்றன.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

ராஜஸ்தான் தபுகாரா பகுதியில் ஹோண்டாவிற்கான ஆலை இயங்கி வருகிறது. அங்கு தான் புதிய அமேஸ் காருக்கான எஞ்சின் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

தற்போதையே அதே 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் எஞ்சின் தான் 2018 அமேஸ் காரிலும் தொடர்கிறது. இது அதிகப்பட்சமாக 88 பிஎச்பி பவரை வழங்கும்.

ஆனால் இம்முறை புதிய டீசல் ஐ-டிடிடெக் எஞ்சின் இரண்டாவது தலைமுறைக்கான அமேஸ் காரில் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 100 பிஎச்பி பவரை வழங்கும்.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

பெட்ரோல் அமேஸ் காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. டீசல் அமேஸ் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

இதுதவிர காரின் உள்கட்டமைப்பில் 7 இஞ்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக்கொள்ளூம் வசதி, நேவிகேஷன் உட்பட பல தொழில்நுட்ப அம்சங்களை பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

முற்றிலும் ஆளே மாறிப்போன விதமாக இருக்கும் புதிய அமேஸ் காரின் வடிவமைப்பு நுணுக்கங்கள் ஹோண்டாவின் மற்றொரு செடான் கார்களான சிட்டி மற்றும் அக்கார்டு மாடல்களிலிருந்து பெறப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

வெளிப்படையாக பார்த்தால், புதிய தலைமுறை அமேஸ் கார் ஒரு மினி-சிட்டி கார் என்று கூட சொல்லலாம். தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் இந்த கார் ஒருவருட காத்திருப்பிற்கு பிறகு தான் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

இந்தியாவில் சப்-காம்பேக்ட் செடான் காரை பொறுத்தவரை மாருதி சுஸுகி டிசையர் தான் விற்பனையில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது.

அதை தூக்கி சாப்பிடும் நோக்கில் தான் முற்றிலும் தலைகீழாக திருப்பிப்போட்டது போல புதிய அமேஸ் காரை வெளியிட்டுள்ளது ஹோண்டா.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

தவிர இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸென்ட், ஃபோக்ஸ்வேகன் ஏமியோ, டாடா டிகோர், ஜெஸ்ட் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட் போன்ற கார்களுக்கும் 2018 ஹோண்டா அமேஸ் சரிநிகர் போட்டியை வழங்க ஆயத்தமாகி வருகிறது.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!

சென்னை - பெங்களூர் இடையிலான போக்குவரத்து தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலுவலக பணி, வர்த்தக விஷயமாக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, போக்குவரத்து கட்டமைப்பை விரிவாக்கும் அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!

இதனை கருத்தில்கொண்டு சென்னை- பெங்களூர் இடையே புதிய விரைவு சாலை அமைப்பதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டது. அதன்படி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த திட்டத்தின் சிறப்புகளை இந்த செய்தியில் காணலாம்.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!

சென்னையிலிருந்து பெங்களூரை சாலை மார்க்கமாக அடைவதற்கு இப்போது மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன. அதில், சென்னையிலிருந்து வேலூர் - கிருஷ்ணகிரி- ஓசூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்-7 தற்போது பிரதான போக்குவரத்து தடமாக இருக்கிறது. 372 கிமீ தொலைவுடைய இந்த தடத்தில் 6 முதல் 8 மணிநேரம் பயணிக்க வேண்டிருக்கிறது.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!

அதேபோன்று, சித்தூர்-கோலார் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்4 வழியாக செல்லும்போது 7 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். இதில், சித்தூர் பகுதியில் இருவழித்தடமாக செல்வதால், விபத்து ஆபத்தும், போக்குவரத்து நெரிசலும் அதிகம் உள்ளது. மற்றொரு வழியானது கிழக்குதொடர்ச்சி மலை வழியாக செல்வதால், அதனை அதிகம் பயன்படுத்துவதில்லை.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!

இந்த சூழலில், சென்னை- பெங்களூர் இடையிலான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் விதத்தில், புதிதாக எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த சாலையானது, சென்னை எல்லைப்பகுதியாக இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி, பெங்களூர் நகரின் எல்லைப்பகுதியில் உள்ள ஒசகோட்டை வரை அமைக்கப்பட இருக்கிறது.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!

ஸ்ரீபெரும்புதூர்- அரக்கோணம்-குடியாத்தம்- வி-கோட்டா- பலம்னேர்- மாலூர்- ஒசகோட்டை வழியாக இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலையானது 250 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. இந்த சாலை திசைக்கு 3 வழித்தடங்கள் வீதம் 6 வழித்தட எக்ஸ்பிரஸ் சாலையாக அமைக்கப்படும். இந்த சாலை 90 மீட்டர் அகலமுடையதாக இருக்கும்.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!

இந்த சாலையில் மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்வதற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு ஒருவழியில் 45,000 முதல் 60,000 கார்கள் செல்வதற்கு கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!

இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்ட பின்னர், இந்த வழித்தடத்தில் சென்னை பெங்களூர் இடையில் பயண நேரம் 4 மணிநேரமாக குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக மங்களூர் வரை இந்த சாலையை நீடிக்கும் திட்டமும் இருக்கிறது.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!

இந்த வழித்தடத்தில் பல்வேறு தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்த மையங்களை ஒட்டி அமைக்கப்பட இருக்கிறது. இதனால், இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கும் இந்த சாலை உறுதுணையாக அமையும்.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!

வாலாஜாபேட்டை அருகில் உள்ள கீழ்வீராணம் மற்றும் பானவரம் பகுதிகளில் புதிய தொழிற்பேட்டை அமைவதற்கான சாத்தியக்கூறுகளும், இந்த வழியாக சென்னை- பெங்களுர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க ஜப்பானிய நிறுவனம் நடத்திய ஆய்வுகளும் இந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களை ஈர்த்துள்ளன. ராணிபேட்டை- பொன்னப்பன்தாங்கல்- அரக்கோணம் இடையிலான பகுதிகளில் நில மதிப்பும் வெகுவாக உயர்ந்துள்ளன.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!

சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மறுபுறத்தில் பெங்களூர் எல்லையில் அமைந்துள்ள ஒசக்கோட்டை, நரசப்புரா, கோலார் வரையிலான பகுதிகளில் உள்ள வாகன நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கும் இந்த சாலை சிறப்பான போக்குவரத்தை வழங்கும்.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!

அதேநேரத்தில், சென்னை- பெங்களூர் இடையே ஏற்கனவே சிறப்பான கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், புதிய எக்ஸ்பிரஸ் சாலை தேவையில்லை என்று எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலைக்கு நிலம் வழங்குவோருக்கு முறையான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

Picture credit: Wiki Commons

English summary
Read in Tamil: Honda unveils Next Generation Amaze at 2018 Auto Expo. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark