புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

புதிய தலைமுறை அம்சங்களுடன் ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பில் க்யூ8 எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கிறது. தொழில்நுட்ப வசதிகளில் மிகச் சிறப்பாக வர இருக்கிறது

By Saravana Rajan

ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி கார்களில் ஆடி க்யூ3 வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, முதல் லாட்டில் ஒதுக்கப்பட்ட அனைத்து கார்களும் வெகு சீக்கிரத்தில் முன்பதிவு செய்யப்பட்டன.

புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

புதிய தலைமுறை அம்சங்களுடன் மாற்றம் கண்டிருக்கும் புதிய ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவியின் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

இந்த நிலையில், தற்போது ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் கடுமையான போட்டி நிலவுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 போன்ற வழக்கமான போட்டியாளர்கள் தவிர்த்து, வால்வோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்சி40 எஸ்யூவியும் ஆடி க்யூ3 எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கிறது.

புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

இந்த நெருக்கடிகளை போக்கிக் கொள்ளும் விதத்தில், இரண்டாம் தலைமுறை மாடலாக ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டிசைனில் மிக அசத்தலாகவும், கூடுதல் வசதிகளுடன் இந்த புதிய தலைமுறை க்யூ3 எஸ்யூவி வர இருக்கிறது.

புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

புதிய ஆடி க்யூ8 என்ற மிகவும் உயர் ரக எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்கள் இந்த ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள் சாயல் அப்படித்தான் இருக்கிறது. மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகளும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, வலிமையான உடல் பகுதி, நவீன தொாழில்நுட்பத்தை வழங்கும் ஆக்சஸெரீகளுன் வசீகரிக்கிறது. இந்த எஸ்யூவியில் 17 அங்குலம் முதல் 20 அங்குலம் வரையிலான அலாய் சக்கரங்கள் ஆப்ஷனலாக கொடுக்கப்பட இருக்கின்றன. இரட்டை வண்ணக் கலவை தேர்விலும் வர இருக்கிறது.

புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

புதிய ஆடி க்யூ3 எஸ்யூவி ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புதிய MQB பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், பழைய மாடலைவிட உட்புற இடவசதி சிறப்பாக மேம்பட்டு இருக்கிறது. குறிப்பாக, அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய பூட்ரூம் தளம் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு. இந்த எஸ்யூவியில் 675 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இருக்கிறது. இருக்கைகளை மடக்கினால் 1,525 லிட்டர் கொள்திறன் வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

ஆடி நிறுவனத்தின் விர்ச்சுவல் காக்பிட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. இதில், 12.3 அங்குல திரையுடன் கூடிய சாதனம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூகுள் எர்த் மேப் மற்றும் வாய்ஸ் கமாண்ட் வசதிகள் இடம்பெறுகின்றன. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், பார்க் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா என மிக அசத்தலான வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். 15 ஸ்பீக்கர்கள் கொண்ட பேங் அண்ட் ஒலுஃப்சன் சவுண்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

வெளிநாடுகளில் ஆடி க்யூ3 எஸ்யூவியின் 35TFSI மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 150 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இது பேஸ் வேரியண்ட்டாக விற்பனைக்கு செல்லும். 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் இரண்டு மாடல்களில் கிடைக்கும். 40TFSI என்ற மாடலானது அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 45TFSIஅதிகபட்சமாக 230 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

இந்த எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் கிடைக்கும். 35TDI மாடலானது 150 எச்பி பவரையும், 40TDI மாடலானது 190 எச்பி பவரையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் முதல் தலைமுறை மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. டீசல் மாடல் 150 எச்பி மற்றும் 184எச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்தில் கிடைக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
India-bound Second Gen Audi Q3 SUV revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X