பெங்களூர் ஷோரூமிற்கு வந்த ஸ்பெஷலான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்!

Written By:
Recommended Video - Watch Now!
Tata Nexon Faces Its First Recorded Crash

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.2.31 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்த இந்த கார் தற்போது பெங்களூர் ஷோரூமில் விற்பனைக்காக நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் தனித்துவமான விஷயம் மற்றும் சிறப்புத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

பெங்களூர் ஷோரூமிற்கு வந்த ஸ்பெஷலான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்!

போர்ஷே 911 ஜிடி3 காரின் 991.2 தலைமுறை மாடல் கார்தான் பெங்களூர் ஷோரூமிற்கு வந்துள்ளது. இந்த கார் பிடிகே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் கிடைத்தாலும், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலையே வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். இந்த சூழலில் பெங்களூர் ஷோரூமிற்கு வந்துள்ள மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் ஷோரூமிற்கு வந்த ஸ்பெஷலான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்!

போர்ஷே 911 ஜிடி3 காரின் பிடிகே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலைவிட மேனுவல் கியர்பாக்ஸ் மாடலின் பிக்கப் சிறப்பாக இருப்பதே, வாடிக்கையாளர் விரும்புவதற்கு காரணம். 0 - 100 கிமீ வேகத்தை எட்டுவதில் ஆட்டோமேட்டிக் மாடல் அரை நொடி தாமதமாக இருக்கிறது.

பெங்களூர் ஷோரூமிற்கு வந்த ஸ்பெஷலான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்!

புதிய போர்ஷே 911 ஜிடி3 காரில் 4.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 493 பிஎச்பி பவரையும், 460 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும் வல்லமை கொண்டது. இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் ஆற்றல் பின் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

பெங்களூர் ஷோரூமிற்கு வந்த ஸ்பெஷலான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்!

புதிய போர்ஷே 911 ஜிடி3 காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.9 வினாடிகளிலும், 160 கிமீ வேகத்தை வெறும் 7.6 வினாடிகளிலும் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது.

பெங்களூர் ஷோரூமிற்கு வந்த ஸ்பெஷலான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்!

புதிய போர்ஷே 911 ஜிடி3 கார் 4,562மிமீ நீளமும், 1,852மிமீ அகலமும், 1,271மிமீ உயரமும் கொண்டது. இந்த கார் 2,457மிமீ வீல் பேஸ் உடையது. இந்த காரின் டிராக் கோஎஃபிசியன்ட் திறன் 0.33cW என்ற மிக குறைவான அளவை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கார் 1,415 கிலோ எடை கொண்டது. ஆட்டோமேட்டிக் மாடலைவிட 15 கிலோ எடை குறைவானது.

பெங்களூர் ஷோரூமிற்கு வந்த ஸ்பெஷலான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்!

போர்ஷே 911 ஜிடி3 காரில் முன்புறத்தில் ஆன்ட்டி ரோல் பார் கொண்ட மெக்பெர்ஷன் சஸ்பன்ஷனும், பின்புறத்தில் மல்டிலிங்க் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அட்ஜெஸ்ட்டபிள் டேம்பர் வசதியும் உள்ளது. பந்தய கார் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சேஸி மிகச் சிறப்பான கையாளுமையை வழங்கும்.

பெங்களூர் ஷோரூமிற்கு வந்த ஸ்பெஷலான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்!

போர்ஷே 911 ஜிடி3 கார் மாடல் ரேஸ் டிராக்குகளில் பயன்படுத்துவதற்கான பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த காரின் பின்புறத்தில் கார்பன் ஃபைபரிலான ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பெங்களூர் ஷோரூமிற்கு வந்த ஸ்பெஷலான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்!

புதிய போர்ஷே ஜிடி3 காரில் 20 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மிச்செலின் பைலட் ஸ்போர்ட் கப் 2 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் 380மிமீ ஸ்டீல் டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பெங்களூர் ஷோரூமிற்கு வந்த ஸ்பெஷலான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்!

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பல்வேறு சிறப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதியும் இடம்பெற்றிருக்கிறது.

பெங்களூர் ஷோரூமிற்கு வந்த ஸ்பெஷலான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்!

ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அல்கான்ட்ரா லெதர் இருக்கைகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் இலகு எடையுடன் கட்டமைக்கும் பொருட்டு, எடை குறைவான பாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

பெங்களூர் ஷோரூமிற்கு வந்த ஸ்பெஷலான போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்!

பெங்களூரில் சூப்பர் கார் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனை காட்டும் விதத்திலேயே, இந்த கார் வந்துள்ளது.

மேலும்... #போர்ஷே #porsche
English summary
The Porsche 911 GT3 is a rather rare car, especially in India. Launched in India in October last year, the second 911 GT3 from the 991.2 generation has arrived in Bangalore.
Story first published: Saturday, January 27, 2018, 13:35 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark