இந்தியாவில் உலவும் ஈரான் நாட்டின் சாய்பா கார்கள்... காரணம் என்ன?

Written By:
Recommended Video - Watch Now!
Andhra Pradesh State Transport Bus Crashes Into Bike Showroom - DriveSpark

ஈரான் நாட்டை சேர்ந்த சாய்பா நிறுவனத்தின் கார்கள் சோதனை ஓட்டம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன. தமிழக- கர்நாடக எல்லையில் டிரக்குகளில் எடுத்துச் செல்லப்பட்ட அந்த கார்களின் ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் உலவும் ஈரான் நாட்டின் சாய்பா கார்கள்... காரணம் என்ன?

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனமும், ஈரான் நாட்டின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பும்[சாய்பா] இணைந்து பட்ஜெட் கார்களை உற்பத்தி செய்து வருகின்றன. ரெனோ கார்களை சாய்பா நிறுவனம் அங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவதோடு, தற்போது சாய்பா பிராண்டில் கார்களையும் விற்பனை செய்கிறது.

இந்தியாவில் உலவும் ஈரான் நாட்டின் சாய்பா கார்கள்... காரணம் என்ன?

இந்த நிலையில், சாய்பா பிராண்டில் விற்பனை செய்யப்படும் ஏரியோ என்ற காரும், டிபா-2 என்ற கார் மாடலும் மேம்பாட்டு பணிக்காக ரெனோ கார் நிறுவனம் இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் உலவும் ஈரான் நாட்டின் சாய்பா கார்கள்... காரணம் என்ன?

இந்த கார்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து இரண்டு திறந்த அமைப்புடைய டிரக்குகளில் பெங்களூரில் உள்ள பாஷ் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்தியாவில் உலவும் ஈரான் நாட்டின் சாய்பா கார்கள்... காரணம் என்ன?

தமிழக- கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி சுங்கச் சாவடியில் இந்த இரண்டு கார்களும் டிரக்குகளில் வைத்து அனுமதிக்கு விண்ணப்பித்துவிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது எடுக்கப்பட்ட படங்களையே இந்த செய்தியில் காண்கிறீர்கள்.

இந்தியாவில் உலவும் ஈரான் நாட்டின் சாய்பா கார்கள்... காரணம் என்ன?

இந்த கார்களை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிப் பணி மற்றும் சோதனை ஓட்டங்களுக்காக ரெனோ நிறுவனம் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் உலவும் ஈரான் நாட்டின் சாய்பா கார்கள்... காரணம் என்ன?

மேலும், சென்னையில் உள்ள ரெனோ- நிஸான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திலும் இந்த கார்கள் ஆய்வுகள் செய்யப்படும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் உலவும் ஈரான் நாட்டின் சாய்பா கார்கள்... காரணம் என்ன?

ஸ்பை படங்களில் நீங்கள் பார்க்கும் இரண்டு கார்களுமே இடதுபக்க ஸ்டீயரிங் வீல் அமைப்பு கொண்டது. இந்த கார்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 79 பிஎச்பி பவரையும், 126 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்தியாவில் உலவும் ஈரான் நாட்டின் சாய்பா கார்கள்... காரணம் என்ன?

1965ம் ஆண்டு சாய்பா கார் நிறுவனம் துவங்கப்பட்டது. சிட்ரோவன், ரெனோ- நிஸான் மற்றும் கியா ஆகிய நிறுவனங்களின் கார்களை ஈரானில் அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் உலவும் ஈரான் நாட்டின் சாய்பா கார்கள்... காரணம் என்ன?

தற்போது சாய்பா பிராண்டில் விற்பனை செய்யப்படும் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் ரக கார் மாடல்களாக இவை இருக்கின்றன. குறைவான விலை மாடலும், விலை உயர்ந்த சாய்பா டிபா கார்களும் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன.

English summary
சாய்பா கார்கள், கார் சோதனை ஓட்டம், கார் மேம்பாட்டு மையம், பாஷ் நிறுவனம்

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark